உடற்பயிற்சி

கேட்கும் திறனை அதிகரிக்கும் பிராமரி பிராணாயாமம்

Published On 2022-08-15 05:31 GMT   |   Update On 2022-08-15 05:31 GMT
  • பிராமரி பிராணாயாமம் தனிச் சிறப்பு வாய்ந்தது.
  • நரம்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது.

பிராணாயாமத்தில் பல வகைகள் உண்டு என்றாலும், பிராமரி பிராணாயாமம் தனிச் சிறப்பு வாய்ந்தது. மனித உடல் இயற்கையாக உருவாக்கும் நைட்ரிக் அமிலம் (nitric acid) உடம்பின் ஆரோக்கியத்துக்கு இன்றியமையாததாகும். உடம்பின் பெரும்பாலான அணுக்கள் நைட்ரிக் அமிலத்தை உற்பத்தி செய்கின்றன.

நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்க உதவுதல், நுரையீரலின் நலத்தை பாதுகாத்தல், இருதய நலத்தை பாதுகாத்தல், அதிக இரத்த அழுத்தத்தை குறைத்தல், மூளைக்கு இரத்த ஓட்டத்தை அதிகரித்தல், தன்னியக்க நரம்பு மண்டலத்தின் (autonomic nervous system) சமிக்ஞை கடத்தியாக இருத்தல், சிறுநீரகத்துக்கு இரத்த ஓட்டத்தை அதிகரித்தல் ஆகியவை நைட்ரிக் அமிலத்தின் முக்கிய பணிகளில் சில.

வயது கூடக் கூட, நைட்ரிக் அமில உற்பத்தி குறைவதால் மூளை, இருதயம், காது இவற்றின் இரத்த ஓட்டம் பாதிப்படையும். இந்த நைட்ரிக் அமில உற்பத்தியை அதிகரிக்கும் ஆற்றல் பிராமரி பிராணாயாமத்துக்கு உண்டு.

பிராமரி பிராணாயாமத்தில் எழுப்பப்படும் வண்டு ரீங்கார ஒலி, நைட்ரிக் அமில உற்பத்தியை 15 மடங்கு அதிகமாக்குவதாக ஆராய்ச்சி மூலம் தெரிய வருகிறது. இந்த ஒரு காரணமே பிராமரி பிராணாயாமத்தை தொடர்ந்து செய்ய போதுமானது.

பலன்கள்

தொண்டை நலத்தை பராமரிக்கிறது.

சளியை போக்க உதவுகிறது

குரல் வளத்தை பாதுகாக்கிறது.

தைராய்டு செயல்பாட்டை மேம்படுத்துகிறது.

பீனியல் மற்றும் பிட்யூட்டரி சுரப்புகளின் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது.

அதிக இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.

நரம்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது.

கேட்கும் திறனை வளர்க்கிறது.

தூக்கமின்மையைப் போக்குகிறது.

மன அழுத்தத்தைப் போக்குகிறது.

மனதை தியான நிலைக்குத் தயார் செய்கிறது.

செய்முறை

விரிப்பில் பத்மாசனம் அல்லது சுகாசனத்தில் அமரவும். முதுகு நேராக இருப்பதை உறுதி செய்யவும். நிதானமாக இரண்டு அல்லது மூன்று முறை சாதாரணமாக மூச்சை இழுத்து விடவும்.

பின், மூச்சை நன்றாக இழுக்கவும். மூச்சை வெளியேற்றும் போது, 'ம்ம்ம்' என்று வாயை திறக்காமல் குரல் ஒலிக்கவும். உங்கள் தொண்டையில் அதிர்வை உணர்வீர்கள். ஐந்து முதல் ஆறு முறை வரை இவ்வாறு செய்யவும். பின் சிறிது நேரம் சாதாரண மூச்சில் இருந்த பின் மீண்டும் ஐந்து அல்லது ஆறு முறை பிராமரி பிராணாயாமம் செய்யவும்.

காதுகளின் திறனை அதிகரிக்கும் பயிற்சியாக இருந்தாலும், தீவிரமான காது பிரச்சினை உள்ளவர்கள் பிராமரி பிராணாயாமம் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

Tags:    

Similar News