உடற்பயிற்சி

நுரையீரலை பலப்படுத்தும் ஆஸ்துமா முத்திரை

Published On 2022-08-18 09:59 IST   |   Update On 2022-08-18 09:59:00 IST
  • பிணிகளுக்கான சிறந்த தீர்வாக குறிப்பிட்ட முத்திரைகள் திகழ்கின்றன.
  • 30 நிமிடங்கள் வரை இம்முத்திரையில் இருக்கவும்.

நம் விரல் நுனி ஒவ்வொன்றிலும் மூவாயிரத்திற்கும் அதிகமான தொடு உணர்வு ஏற்பிகள் (touch receptors) உள்ளன. இவை மெல்லிய அழுத்தத்தின் மூலம் தூண்டப் பெறுகின்றன. கை மூளையின் பல பகுதிகளோடு தொடர்பு கொண்டது. தொடு உணர்வு ஏற்பிகள் மெல்லிய அழுத்தத்தால் தூண்டப்படும் போது மூளையின் குறிப்பிட்ட பகுதிகளின் செயல்பாடுகளைத் தூண்டி உடல், மன நலத்தை மேம்படுத்த உதவுகின்றன. ஆகையினால் பிணிகளுக்கான சிறந்த தீர்வாக குறிப்பிட்ட முத்திரைகள் திகழ்கின்றன.

ஆஸ்துமா முத்திரை சுவாசத்தைச் சீராக்குகிறது. நுரையீரலை பலப்படுத்துகிறது. மூச்சுத் திணறலைப் போக்கவும் தவிர்க்கவும் இம்முத்திரை உதவுகிறது.

செய்முறை

இரண்டு கைகளின் நடுவிரல்களின் நகங்களை ஒன்றாக வைக்கவும். உள்ளங்கைகளின் அடிப்பகுதிகளை ஒன்றாக வைத்து மற்றைய விரல்களை ஒன்றோடு ஒன்று சேர்க்காமல் வைக்கவும். 30 நிமிடங்கள் வரை இம்முத்திரையில் இருக்கவும்.

Tags:    

Similar News