உடற்பயிற்சி

ஆரோக்கியமாகவும் அமைதியாகவும் வாழ உதவும் அஷ்டாங்க யோகம்

Update: 2022-06-29 04:56 GMT
  • அஷ்டாங்க யோகம் என்ற 8 படிகளே வாழ்வின் வெற்றிப்படி.
  • யோகா என்ற வார்த்தைக்கு ஒன்றிணைதல் என்று பொருள்.

யோகா என்ற சொல் சமஸ்கிருதச் சொல் ஆகும். யோகா என்ற வார்த்தைக்கு ஒன்றிணைதல் என்று பொருள். யோகாசனம்= யோகா+ஆசனம், அதாவது மனதை அலைபாய விடாமல் ஒருநிலைப்படுத்தி செய்யப்படும் உடற்பயிற்சி என்று பொருள்.

ஒவ்வொரு மனிதனும் வாழ்வில் உடல் ஆரோக்கியமாகவும் அமைதியாகவும் வாழவும், தன்னை உணரவும், தனக்குள் இறுக்கும் பேராற்றலை உணரவும் ஒரே வழி ஸ்ரீ பதஞ்சலி மகரிஷி அருளிய அஷ்டாங்க யோகம் என்ற 8 படிகளே வாழ்வின் வெற்றிப்படி என எளிமையாக விளக்கியுள்ளார்.

1. இயமம்

மனம் சம்பந்தப்பட்ட ஒழுக்க நியதிகள். முக்கியமான கட்டுப்பாடுகள் அஹிம்சை, சத்தியம், பிரம்மச்சரியம், அஸ்தேயம், பேராசையின்மை போன்ற அடிப்படை மனித பண்புகளை வளர்க்க வேண்டும்.

2. நியமம்

இதுவும் மனம் சார்ந்த ஒழுக்க கோட்பாடுகள் – அகத்தூய்மை, புறத்தூய்மை, தவம், புனித நூல்கள் படித்தல், இறைவனிடம் சரணாகதி முதலியவற்றை விளக்குகிறது.

3. ஆசனம்

ஆசனம் என்ற சொல்லுக்கு 'இருக்கை' என்பது பொருள். உடலை ஒரு நிலையில் குறிப்பிட்ட அளவு நேரம் இருக்கச் செய்யும் உடற்பயிற்சியையும் அவை சார்ந்த நிலைகளையும் குறிக்கும் சொல்லே யோகாசனம்

4. பிராணாயாமம்

பிராணயாமம் (சமசுகிருதம்: प्राणायाम prāṇāyāma ) என்பது ஒரு சமசுகிருத சொல், அதற்கு "பிராணா அல்லது மூச்சைக் கட்டுப்படுத்தி வைத்தல்" என்று பொருள்

5. பிரத்தியாகாரம்

பிரத்தியாகாரம் என்பது அனைத்து புலன்களையும் கட்டுப்படுத்துவது ஆகும். மொத்தம் 11 புலன்கள் உள்ளன. அதாவது ஐந்து உணர்வுகள், ஐந்து செயல் புலன்கள் மற்றும் ஒரு மனம். பிரதி மற்றும் அகாரா, அதுவே பிரத்தியாகாரம் எனப்படுகிறது

6. தாரணை

மனதை ஒரு பொருளில் குவிய செய்தல். அதன் மூலம் எண்ணற்ற ஆற்றலை அடையலாம். தாரணை கை கூட வைராக்கியம், சாத்வீக உணவு, தனித்திருத்தல் முதலியவை தேவை.

7. தியானம்

ஒரே சிந்தனை. தாரனையின் முடிவு தியானமாகும். மன அமைதி. இதயம் பாதுகாக்கப்படும். எந்த நோயும் வராது. தியானம் கைகூடினால் எல்லாம் கைகூடும்.

8. சமாதி

ஆதியில் சமம். எண்ணமற்ற நிலை. மனம் கரைந்த நிலை. மௌன நிலை. பேரின்ப நிலை. இதுவே நம் உண்மை இயல்பு.

அஷ்டாங்க யோக எட்டு படிகளை அனைவரும் கடை பிடிக்கலாம். ஆனந்த வாழ்வு வாழலாம்.

Tags:    

Similar News