உடற்பயிற்சி
சின் முத்திரை

சின் முத்திரை செய்வதால் கிடைக்கும் பலன்கள்

Update: 2022-05-17 02:38 GMT
சின்முத்திரை என்னும் சொற்றொடர் ஞான அடையாளம் எனப் பொருள்படும். சித் ஞானம் முத்திரை அடையாளம், எனவே ஞானப் பொருளின் அடையாளக் குறிப்பாக திகழ்வது சின்முத்திரை எனலாம்.
சின்முத்திரை என்னும் சொற்றொடர் ஞான அடையாளம் எனப் பொருள்படும். சித் ஞானம் முத்திரை அடையாளம், எனவே ஞானப் பொருளின் அடையாளக் குறிப்பாக திகழ்வது சின்முத்திரை எனலாம்.

வலது கைக் கட்டைவிரல் சுட்டுவிரலுடன்  ஒன்றையொன்று வளைந்து சார்ந்து நிற்க, ஏனைய மூன்று விரல்களும் விலகி தனித்து சேர்ந்து நின்று கொண்டிருக்கும் நிலை சின்முத்திரை ஆகும்.

சின் முத்திரை செய்வதற்கு பத்மாசனம் அல்லது வஜ்ஜிராசனம் முறையில் அமரவும்.

நிமிர்ந்து உட்காரவும். முதுகெலும்பு நேராக இருக்க வேண்டும். கையில் உள்ள கட்டை விரல் ஆள் காட்டி விரல் நுனியில் தொட்டு, அந்த இடத்தில் லேசான அழுத்தம் கொடுக்கவும். மற்ற மூன்று விரல்களும் தரையை நோக்கி இருக்க வேண்டும்.

தினமும் 15 நிமிடம் வரை செய்யலாம். இதற்காகப் பிரத்தியேக ஆசனங்கள் எதுவும் தேவையில்லை, தரையில் அமர்ந்தோ ,நாற்காலியில் அமர்ந்தோ , அவரவர் வசதியில் அமர்ந்து செய்யலாம்.

பலன்கள்

மனசோர்வு நீங்கி மனம் தெளிவடையும். மூளை செல்கள் புத்துணர்ச்சி பெறும். கோபம், மன அழுத்தம், டென்ஷன் நீக்கும்.

தலைவலி, தூக்கமின்மை விலகும்.
Tags:    

Similar News