உடற்பயிற்சி
வருண முத்திரை, சூரிய முத்திரை, மாதங்கி முத்திரை

பருக்கள், தேமல் வராமல் இருக்க செய்ய வேண்டிய முத்திரைகள்

Published On 2022-05-06 02:33 GMT   |   Update On 2022-05-06 02:33 GMT
முகத்தில் பருக்கள் வராமல் இருக்கவும், தசைகள் பளபளப்பாக இருக்கவும், தேமல் வராமல் இருக்கவும் கீழே கொடுக்கப்பட்டுள்ள முத்திரைகளை செய்து வந்தால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.
உடல் அதிக உஷ்ணம் காரணமாகவும், அதிக சிந்தனை, தூக்கமின்மை, அஜீரணம், மலச்சிக்கல், நாம் எடுக்கும் தகாத உணவு காரணமாகத்தான் பருக்கள் வருகின்றது. இதற்கு வருண முத்திரை, சூரிய முத்திரை, மாதங்கி முத்திரை தினமும் காலை, மதியம், மாலை சாப்பிடுமுன் பயிற்சி செய்ய வேண்டும். இரண்டு நிமிடம் பயிற்சி செய்தால் போதும். உணவில் ஒரு ஒழுக்கத்தை கடைபிடிக்கவும். அதிக காரம், புளிப்பு, உப்பு வேண்டாம். புலால் அதிகமாக உண்ணாதீர்கள். முடிந்த வரை கீரை வகைகள், பழங்கள், உலர்ந்த திராட்சை எடுத்துக் கொள்ளுங்கள்.

வருண முத்திரை (தோல் வியாதி நீங்கும்):-

விரிப்பில் நிமிர்ந்து அமரவும், முதுகெலும்பு நேராக இருக்கட்டும், கண்களை மூடி பத்து வினாடிகள் இயல்பாக நடக்கும் மூச்சை கவனிக்கவும். பின் சுண்டுவிரல் பெருவிரல் நுனியை தொடவும். மற்ற விரல்கள் தரையை நோக்கி இருக்கட்டும். இரண்டு நிமிடங்கள் பயிற்சி செய்யவும். காலை மதியம் மாலை சாப்பிடும்முன் பயிற்சி செய்யவும்.

சூரிய முத்திரை: விரிப்பில் நிமிர்ந்து அமரவும் முதுகெலும்பு நேராக இருக்கட்டும். கண்களை மூடி பத்து வினாடிகள் இயல்பாக நடக்கும் மூச்சை கவனிக்கவும். பின் மோதிர விரலை மடக்கி உள்ளங்கையில் படும்படி வைக்கவும். மோதிர விரலின் மையத்தில் கட்டை விரலை வைத்து இலேசாக ஒரு அழுத்தும் கொடுக்கவும். மற்ற விரல்கள் தரையை நோக்கியிருக்கட்டும். இரண்டு கைகளிலும் செய்யவும். இரண்டு நிமிடங்கள் இருக்கவும். காலை, மதியம், மாலை சாப்பிடும்முன் பயிற்சி செய்யவும்.

மாதங்கி முத்திரை: விரிப்பில் நேராக அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். எல்லா கை விரல்களையும் சேர்க்கவும். நடுவிரல் மட்டும் படத்தில் உள்ளது போல் நேராக இருக்கட்டும். கைவிரல்களை வயிற்று பக்கத்தில், அதாவது வயிறுக்கு முன்பாக வைக்கவும். இரண்டு நிமிடங்கள் காலை, மதியம், மாலை பயிற்சி செய்யவும்.

மேற்குறிப்பிட்ட மூன்று முத்திரைகளையும் பயிலுங்கள். முகப்பரு, தோல் வியாதி வராமல் வாழலாம்.

பெ.கிருஷ்ணன் பாலாஜி M.A.(Yoga)
63699 40440
pathanjaliyogam@gmail.com
Tags:    

Similar News