உடற்பயிற்சி
பித்தப்பை, சிறுநீரக பையில் கற்கள் வராமல் வாழ்வதற்குரிய யோக சிகிச்சை

பித்தப்பை, சிறுநீரக பையில் கற்கள் வராமல் வாழ்வதற்குரிய யோக சிகிச்சை

Update: 2022-04-29 02:24 GMT
பித்தப்பை, சிறுநீரகபையில் கற்கள் வராமல் வாழ யோக சிகிச்சைகள் உள்ளன.வந்தாலும் யோகா, முத்திரை, உணவின் மூலம் அறுவை சிகிச்சை செய்யாமலேயே சரியாகிவிடும்.
பித்தப்பை, சிறுநீரக பையில் கற்கள் வராமல் வாழ்வதற்குரிய யோக சிகிச்சையும், வந்தால் அறுவை சிகிச்சை செய்யாமல், யோகச் சிகிச்சை மூலம் குணப்படுத்த உதவும் யோகா சிகிச்சை முறைகளையும் பார்க்கலாம்.

முத்திரை: - பிராண முத்திரை

சிறுநீரகம்பித்தப்பையில் கற்கள் வராமல் வாழ முதலில் பிராண முத்திரை செய்யுங்கள்.விரிப்பில் நிமிர்ந்து அமரவும்.கண் களை மூடி பத்து வினாடிகள் இயல்பாக நடக்கும் மூச்சை கவனிக்கவும்.பின் மோதிர விரல், சுண்டு விரல் அதன் மையத்தில் கட்டை விரலை வைத்து மற்ற விரல்களை தரையை நோக்கி படத்தில் உள்ளதுபோல் வைக்கவும்.இரு கைகளிலும் செய்யவும்.இரண்டு நிமிடம் முதல் ஐந்து நிமிடங்கள் பயிற்சி செய்யவும்.காலை, மாலை இருவேளையும் சாப்பிடுமுன் பயிற்சி செய்யவும்.

சூரிய முத்திரை

விரிப்பில் நிமிர்ந்து அமரவும்.முதுகெலும்பு நேராக இருக்கட்டும்.கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை பத்து வினாடிகள் கூர்ந்து கவனிக் கவும்.பின் மோதிர விரலை மடக்கி அதன் மையத்தில் கட்டை விரலை வைக்கவும்.மற்ற விரல்கள் தரையை நோக்கி இருக்கட்டும்.இரண்டு நிமிடம் முதல் ஐந்து நிமிடங்கள் பயிற்சி செய்யவும்.காலை, மாலை இருவேளையும் சாப்பிடுமுன் பயிற்சி செய்யவும்.

வருண முத்திரை

விரிப்பில் நிமிர்ந்து அமரவும், முதுகெலும்பு நேராக இருக்கட்டும்.கண்களை மூடி பத்து வினாடிகள் இயல்பாக நடக்கும் மூச்சை கவனிக்கவும்.பின் சுண்டு விரலால் பெருவிரல் நுனி யைத் தொடவும்.மற்ற விரல்கள் தரையை நோக்கி இருக்கட்டும். கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை இரண்டு நிமிடங்கள் கூர்ந்து கவனிக்கவும்.காலை மாலை இருவேளையும் சாப்பிடுமுன் பயிற்சி செய்யவும்.

யோகாசனம்: நவுகாசனம்

விரிப்பில் நேராக படுக்கவும்.கைகளை தலைக்கு பின்னால் நேராக வைத்து மூச்சை இழுத்து க்கொண்டேகால், கைகளை உயர்த்தி கால் பெருவிரல் நோக்கி இரண்டு கைகளும் படத்தில் உள்ளதுபோல் வைக்கவும்.பத்து வினாடிகள் இருக்கவும்.பின் மெதுவாக சாதாரண நிலைக்கு வரவும்.இதேபோல் மூன்று முறைகள் பயிற்சி செய்யவும்.காலை,மாலை இருவேளை சாப்பிடுமுன் பயிற்சி செய்யவும்.

உணவு

மஞ்சள், கரிசலாங்கண்ணி கீரை வாரம் ஒரு முறை உணவில் எடுக்கவும். மணத்தக்காளி, முருங்கைக்கீரை, தண்டங்கீரை உணவில் அடிக்கடி எடுக்கவும்.கொய்யா பழம், மாதுளம் பழம், கருப்பு திராட்சை உணவில் அடிக்கடி எடுக்கவும்.அதிக காரம், புளிப்பு, உப்பு உணவில் தவிர்க்கவும்.
கருவேப்பிலை, கொத்தமல்லி, புதினா கீரை உணவில் அடிக்கடி எடுக்கவும்.வெள்ளரிக்காய், சுரைக்காய், பூசணிக்காய், கோவக்காய், முள்ளங்கி, புடலங்காய், வாழை தண்டு, பீட்ரூட், முட்டைகோஸ், பீர்க்கங்காய் உணவில் அடிக்கடி எடுக்கவும்.

தர்பூசணி, வெள்ளரிப்பழம், பப்பாளி பழம், உணவில் அடிக்கடி எடுக்கவும். எள், கொள்ளு, மக்கா சோளம், பச்சை பயிறு, கொண்டக் கடலை, பச்சை பட்டாணி, கேழ்வரகு உணவில் எடுக்கவும். வாரம் ஒரு முறை வாழைப்பூ துவையல் சாப்பிடவும்.மாதம் ஒரு முறை வேப்ப இலை கொழுந்து சாப்பிடவும். உடலுக்கு நல்ல ஓய்வு கொடுக்கவும்.இரவு பத்து மணி முதல் காலை 3மணி வரை ஓய்வு எடுக்கவும்.மனதை அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள்.அதற்கு மெதுவாக மூச்சை இழுத்து மிக மெதுவாக மூச்சை வெளிவிடவும்.நேரம் கிடைக்கும் பொழுது மிக மெதுவாக மூச்சை இழுத்து மிக மெதுவாக மூச்சை வெளிவிடவும்.

நேரம் கிடைக்கும் பொழுது ஒரு இடத்தில அமர்ந்து நிமிர்ந்து உட்காரவும்.கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை மட்டும் கூர்ந்து தியானிக்கவும்.உடல் ஆடாமல், அசையாமல் பத்து நிமிடம் இருக்கவும்.இதனை காலை, மாலை பயிற்சி செய்யவும்.இப்படி உடல் ஆடாமல் இருக்கும் பொழுது மன அமைதி கிடைக்கும்.இதயத்துடிப்பு சீராகும்.சிறுநீரகம், சிறுநீரகப்பை, பித்தப்பைக்கு நல்ல பிராண ஆற்றல் கிடைக்கும்.உடலில் எந்தப் பகுதியிலும் கழிவுகள் தங்காது. ரத்த அழுத்தம் வராமல் வாழலாம்.

யோகக் கலைமாமணி
பெ.கிருஷ்ணன் பாலாஜி M.A.(Yoga)
63699 40440
pathanjaliyogam@gmail.com
Tags:    

Similar News