உடற்பயிற்சி
வேர்கடலை பொடி

ஆந்திரா ஸ்பெஷல் காரசாரமான வேர்கடலை பொடி

Update: 2022-04-22 05:21 GMT
இந்த வேர்க்கடலை பொடியில் நல்லெண்ணையை ஊற்றி இட்லியில் பிரட்டி அப்படியே சாப்பிட்டு தான் பாருங்க அவ்வளவு அருமையா இருக்கும். இன்று வேர்க்கடலை பொடி செய்வது எப்படி பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்

வேர்க்கடலை – 1 கப்,
வரமிளகாய் – 20,
எண்ணெய் - 1 ஸ்பூன்
கடலைப்பருப்பு – அரை கப்,
கறிவேப்பிலை – 2 கொத்து,
பூண்டு பல் – 10,
உப்பு – தேவையான அளவு

செய்முறை

அடுப்பில் ஒரு கடாயை எண்ணெய் ஊற்றி சூடானதும் வரமிளகாயை போட்டு வறுத்த பின்னர் வேர்க்கடலை  கடலைப்பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வறுத்துக் கொள்ள வேண்டும்.

வேர்க்கடலையும் கடலைப்பருப்பும் பொன்னிறமாக வறுபடும் வரை இந்த பொருட்களை எல்லாம் கை விடாமல் வறுத்துக் கொண்டே இருக்க வேண்டும்.

அனைத்தும் நன்றாக வறுபட்டவுடன் ஒரு தட்டில் கொட்டி நன்றாக ஆற வைத்துவிடுங்கள்.

நன்றாக ஆறியதும் மிக்சியில் போட்டு அத்துடன் பூண்டு, உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ள வேண்டும்.

அவ்வளவு தான் மணக்க மணக்க காரசாரமான வேர்கடலை பொடி தயார்.
Tags:    

Similar News