உடற்பயிற்சி
அபான வாயு முத்திரை

இடுப்பு வலி வராமல் வாழ முத்திரைகள்

Update: 2022-03-17 04:16 GMT
இன்று சிறியவர் முதல் பெரியவர் வரை இடுப்பு வலி, கழுத்து வலி, முதுகு வலியால் அவதிப்படுகின்றனர். உடல் உள் உறுப்புக்களை சரியாக இயங்கச் செய்யும் யோகா பயிற்சிகளை நாம் எடுத்துக் கொண்டால் ராஜ உறுப்புக்கள் சரியாக இயங்கும்.
அபான முத்திரை: விரிப்பில் நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை கூர்ந்து பத்து வினாடிகள் கவனிக்கவும். பின் மோதிர விரல் நடு விரல் அதன் மையத்தில் கட்டை விரலை வைத்து ஒரு சிறிய அழுத்தம் கொடுக்கவும். மற்ற இரண்டு விரல்கள் தரையை நோக்கி இருக்கட்டும். இரு கைகளிலும் செய்யவும். இரண்டு நிமிடங்கள் காலை மாலை சாப்பிடும் முன் பயிற்சி செய்யவும்.

அபான வாயு முத்திரை:விரிப்பில் நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை கூர்ந்து பத்து வினாடிகள் கவனிக்கவும். பின் முதலில் அபான முத்திரை செய்து நடுவிரல் மோதிரவிரல் அதன் மையத்தில் பெரு விரலை வைக்கவும். பின் ஆள்காட்டி விரலை கட்டைவிரல் அடியில் வைக்கவும். சுண்டு விரல் மட்டும் தரையை நோக்கி இருக்கட்டும். இரண்டு கைகளிலும் செய்யவும். காலை மாலை சாப்பிடுமுன் இரண்டு நிமிடங்கள் செய்யவும்.
Tags:    

Similar News