கால்பந்து

எதிர்பார்த்து ஏமாந்ததுதான் மிச்சம்.. டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறும் மெஸ்ஸி ரசிகர்கள்

Published On 2024-03-19 14:47 GMT   |   Update On 2024-03-19 14:47 GMT
  • ஹாங்காங்கில் பிப்ரவரி மாதம் நடந்த நட்பு ரீதியான கால்பந்து போட்டியில், மெஸ்ஸியின் விளையாட்டை காண்பதற்காக பெரும்பாலன கால்பந்து ரசிகர்கள் டிக்கெட் வாங்கியிருந்தனர்.
  • ஆனால் அந்த ஆட்டத்தில் காயம் காரணமாக மெஸ்ஸி களமிறங்க வாய்ப்பில்லை என்று அறிவிக்கப்பட்டது.

மெஸ்ஸியின் மாயாஜாலத்தை எதிர்பார்த்து டிக்கெட் வாங்கிய ஹாங்காங் ரசிகர்கள் ஏமாற்றமடைந்த நிலையில், தற்போது டிக்கெட் கட்டணத்தில் பாதியை திரும்ப அளிக்க நிர்வாகிகள் முன்வந்துள்ளனர்.

ஹாங்காங்கில் பிப்ரவரி மாதம் நடந்த நட்பு ரீதியான கால்பந்து போட்டியில், மெஸ்ஸியின் விளையாட்டை காண்பதற்காக பெரும்பாலன கால்பந்து ரசிகர்கள் டிக்கெட் வாங்கியிருந்தனர்.

ஆனால் அந்த ஆட்டத்தில் காயம் காரணமாக மெஸ்ஸி களமிறங்க வாய்ப்பில்லை என்று அறிவிக்கப்பட்டது. இதனால் கடும் அதிருப்தியடைந்த ரசிகர்கள் கோபத்தில் நீதிமன்றத்தை நாடவும் முடிவு செய்தனர்.

இதனால் போட்டியை முன்னெடுத்த நிர்வாகிகள் தரப்பு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ரசிகர்கள் டிக்கெட் கட்டணத்தில் பாதியை திரும்பப் பெறலாம் என்றும், ஆனால் சட்ட ரீதியான நடவடிக்கையை கைவிட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.

கட்டணத்தை திருப்பித் தருவதால் 7.1 மில்லியன் டாலர் செலவாகும் என்றும் கூறப்படுகிறது. மெஸ்ஸி ரசிகர்கள் தோராயமாக 4,880 ஹாங்காங் டாலர் செலவிட்டுள்ளனர். அதுமட்டுமின்றி, 38,000 ரசிகர்கள் டிக்கெட் வாங்கியுள்ளனர்.

ரசிகர்கள் நீதிமன்றம் அளவுக்கு செல்ல காரணமாக இருந்தது மெஸ்ஸி இதற்கு அடுத்த போட்டியில் விளையாடியதுதான். இந்த போட்டியில் காயம் காரணமாக ஓய்வெடுத்த மெஸ்ஸி, அடுத்த நாள் ஜப்பான் அணிக்கு எதிராக களமிறங்கினார் என்பதே ரசிகர்களை கொதிப்படைய வைத்திருந்தது.

Tags: