உலக கோப்பை கால்பந்து-2022

தேசிய மனித உரிமைகள் ஆணைய கண்காணிப்பாளர் ஆய்வு

Published On 2023-10-01 08:44 GMT   |   Update On 2023-10-01 08:44 GMT
  • கழிப்பறை வசதி, தண்ணீர் வசதி போன்றவற்றை சோதனை
  • ஏதேனும் புகார்கள் உள்ளதா என கேட்டறிந்தார்

ராணிப்பேட்டை:

வாலாஜாவில் பல்வேறு சிகிச்சை பிரிவுகளுடன் மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரியில் இயங்குகிறது.

வாலாஜா ஒன்றியத்தில் உள்ள அனைத்து கிராம மக்கள், நகர்புற மக்கள், தேசிய நெடுஞ்சாலையில் வாகன விபத்து ஏற்படுபவர்கள் என தினந்தோறும் சுமார் 500-க்கும் மேற்பட்டவர்கள் தேசிய சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

இந்நிலையில் தேசிய மனித உரிமை ஆணைய சிறப்பு கண்காணிப்பாளர் பால்கிஷன் கோயல் வாலாஜா அரசு தலைமை ஆஸ்பத்திரியில் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வில் மருத்துவமனையின் கோப்புகள், நோயாளிக்களுக்கான தனி பிரிவுகள் உள்ளதா, கழிப்பறை வசதி, சிகிச்சை முறை, தண்ணீர் வசதி போன்றவற்றை ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது உள்நோயாளிகளின் உறவினர்கள் காத்திருப்பு அறையில் அமர்ந்திருந்தவர்களிடம் குறைகள் ஏதேனும் உள்ளதா என கேட்டறிந்தார்.

இதனை தொடர்ந்து அவசர சிகிச்சை பிரிவை பார்வையிட்டு அங்கு பணிபுரியும் செவிலியர்களிடம் பணிபுரியும் நேரம், பணி சுமை குறித்த ஏதேனும் புகார்கள் உள்ளதா என கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின் போது ராணிப்பேட்டை உதவி கலெக்டர் வினோத்குமார், சுகாதார இணை இயக்குனர் டாக்டர். விஜயா முரளி, மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர்.உஷா நந்தினி, மற்றும் செவிலியர்கள், அலுவலக பணியாளர்கள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News