வழிபாடு

கிரக தோஷ பாதிப்புகள் விலக சொல்ல வேண்டிய விநாயகர் ஸ்லோகம்

Update: 2022-06-28 07:51 GMT
  • கணபதி மந்திரங்களை பிரம்ம முகூர்த்தத்தில் உச்சரிப்பது மிகவும் நல்லது
  • இந்த ஸ்லோகத்தை 27 தடவை வடக்கு நோக்கி அமர்ந்து ஜெபிக்க வேண்டும்.

விநாயகர் இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞானசக்தி என்ற மும்மதங்களைப் பொழிகின்றார். 'வி' என்றால் இதற்கு மேல் இல்லை எனப் பொருள். நாயகர் என்றால் தலைவர் எனப் பொருள். இவருக்கு மேல் பெரியவர் யாருமில்லை என்று பொருள்பட விநாயகர் என்று பெயரிடப்பட்டது.

விநாயகருக்கு கரும்பு, அவரை, பழங்கள், சர்க்கரை, பருப்பு, நெய், எள், பொரி, அவல், துவரை, இளநீர், தேன், பயறு, அப்பம், பச்சரிசி, பிட்டு, வெள்ளரிப்பழம், கிழங்கு, அன்னம், கடலை முதலியன வைத்து நிவேதனம் செய்ய வேண்டும்.

கணபதி மந்திரங்களை பிரம்ம முகூர்த்த வேளை எனப்படும் அதிகாலை 4.30 முதல் 6.00-க்குள் உச்சரிப்பது மிகவும் நல்லது என கணேச உத்தர தாயினி உபநிஷத்தில் கூறப்பட்டுள்ளது.

ராசிஸ் தாரா திதிர் யோக : வார :காரண அம்சக

லக்னோ ஹோரா காலசக்ரோ மேரு :சப்தர்ஷயோ த்ருவ:||

ராஹூர் மந்த:கவிர் ஜீவ :புதோ பௌம சசீ ரவிஹி

கால: ஸ்ருஷ்டி :ஸ்திதிர் விஸ்வ:ஸ்தாவரோ ஜங்கமோ ஜகத்||

- இந்த ஸ்லோகத்தை 27 தடவை வடக்கு நோக்கி அமர்ந்து ஜெபித்து வர கிரகதோஷம் நீங்கும்.

Tags:    

Similar News