வழிபாடு

திருப்பதி அருகே உள்ள பிரசன்ன வெங்கடேஸ்வர சுவாமி கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம்

Published On 2023-05-24 04:46 GMT   |   Update On 2023-05-24 04:46 GMT
  • வாசனை திரவியங்கள் கலந்த புனிதநீர் கோவில் முழுவதும் தெளிக்கப்பட்டது.
  • 31-ந்தேதி முதல் ஜூன் 8-ந்தேதி வரை பிரம்மோற்சவம் நடைபெறுகிறது.

திருப்பதி அருகே அப்பாலயகுண்டாவில் உள்ள பிரசன்ன வெங்கடேஸ்வர சுவாமி கோவிலில் வருகிற 31-ந் தேதி முதல் அடுத்த மாதம் (ஜூன்) 8-ந் தேதி வரை பிரம்மோற்சவம் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு நேற்று ஆழ்வார் திருமஞ்சனம் நடந்தது. காலையில் சுவாமி எழுந்தருளி தோமாலசேவை, கொலு, பஞ்சாங்கஸ்ரவணம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. காலை 8 மணி முதல் 10.30 மணி வரை கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற்றது.

அப்போது கோவில் வளாகம், சுவர்கள், மேற்கூரை, பூஜை பொருட்கள் உள்ளிட்டவை தண்ணீர் கொண்டு சுத்திகரிக்கப்பட்டன. அதன்பின், நாமகோபு, ஸ்ரீசூர்ணம், கஸ்தூரி மஞ்சள், கற்பூரம், சந்தனப்பொடி, குங்குமம், கிச்சிலிக்கட்டி போன்ற வாசனை திரவியங்கள் கலந்த புனிதநீர் கோவில் முழுவதும் தெளிக்கப்பட்டது.

அதன்பின்னர் 11.30 மணி முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.

Tags:    

Similar News