வழிபாடு

திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில் பிரம்மோற்சவம் நாளை தொடங்குகிறது

Published On 2023-02-25 09:03 GMT   |   Update On 2023-02-25 09:03 GMT
  • மார்ச் 4-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.
  • 6-ந்தேதி திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.

திருவொற்றியூரில் உள்ள வடிவுடையம்மன் உடனுறை தியாகராஜசுவாமி கோவில் பிரம்மோற்சவ விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) இரவு 8.30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதனைத் தொடர்ந்து மார்ச் 3-ந்தேதி இரவு 7.30 மணிக்கு சந்திரசேகர சுவாமி புஷ்ப பல்லக்கு ஊர்வலம் நடைபெறுகிறது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 4-ந்தேதி நடக்கிறது. அன்று காலை 8 மணி முதல் 10.45 மணிக்குள் சந்திரசேகரர் சுவாமி திருத்தேர் புறப்பாடு நடைபெறுகிறது. அப்போது 47 அடி உயர மரத்தேரில் சந்திரசேகரருடன் திரிபுர சுந்தரி எழுந்தருளி மாட வீதிகளில் உலா வருகிறார்.

தொடர்ந்து மார்ச் 6-ந்தேதி காலை 9.30 மணி முதல் 10.30 மணிக்குள் கல்யாண சுந்தரர்சுவாமி திருக்கல்யாண உற்சவமும், பிற்பகல் 2 மணிக்கு அறுபத்து மூன்று நாயன்மார்கள் ஊர்வலமாக புறப்பட்டு மாடவீதி உற்சவம் நடைபெறும், தொடர்ந்து இரவு 9 மணியளவில் மகிழடி சேவை உற்சவம் நடைபெறுகிறது.

Tags:    

Similar News