வழிபாடு

பந்தல்கால் முகூர்த்தம் நிகழ்ச்சி நடந்தபோது எடுத்த படம்.

பிரம்மோற்சவ விழாவையொட்டி திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் பந்தல்கால் நடும் நிகழ்ச்சி

Published On 2023-04-25 04:54 GMT   |   Update On 2023-04-25 04:54 GMT
  • மே 16-ந் தேதி கொடியேற்றம் நடக்கிறது.
  • தேரோட்டம் மே 30-ந் தேதி நடக்கிறது.

காரைக்காலை அடுத்த திருநள்ளாற்றில் உலக புகழ் பெற்ற சனீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சனிக்கிழமைதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர்களும் வருகை தந்து சாமி தரிசனம் செய்வார்கள்.

இந்த கோவிலில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவ விழா 18 நாட்கள் சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவ விழா நேற்று பந்தல்கால் முகூர்த்தம் நிகழ்ச்சியுடன் நேற்று தொடங்கியது.

விழாவையொட்டி கொடிக்கம்ப விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து பந்தலுக்கான கம்பத்திற்கு அபிஷேக ஆராதனை நடத்தப்பட்டு, பந்தல்கால் முகூர்த்த நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன், கோவில் கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள், திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்து முன்னாள் தலைவர் சிங்காரவேலு மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பிரமேற்சவ விழா கொடியேற்றம் அடுத்த மாதம் (மே) 16-ந் தேதியும், தேரோட்டம் மே 30-ந் தேதியும், சனீஸ்வர பகவான் தங்க காக வாகனத்தில் திருவீதியுலா நிகழ்ச்சி மே 31-ந் தேதியும், தெப்ப உற்சவ விழா ஜூன் 1-ந் தேதியும் நடைபெற உள்ளது.

Tags:    

Similar News