வழிபாடு

"ஓம் நமோ நாராயணா" என ராமானுஜர் உபதேசித்த திருக்கோஷ்டியூர்

Published On 2023-06-28 07:16 GMT   |   Update On 2023-06-28 07:16 GMT
  • கோவிலில் மூலவரின் மேலுள்ள அஷ்டாங்க விமானம் மிகவும் புகழ்பெற்றது.
  • திருமாலின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 104-வது திவ்ய தேசமாகும்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே திருக்கோஷ்டியூரில் பிரசித்தி பெற்ற சவுமிய நாராயண பெருமாள் கோவில் உள்ளது. திருமாலின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் 104-வது திவ்ய தேசம் இக்கோவில் ஆகும்.

இந்த தலத்தை பெரியாழ்வார், திருமழிசை ஆழ்வார், திருமங்கையாழ்வார், பேயாழ்வார், பூதத்தாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளனர். கோவிலில் மூலவரின் மேலுள்ள அஷ்டாங்க விமானம் மிகவும் புகழ்பெற்றது.

தேவ சிற்பி விஸ்வகர்மா, அசுர சிற்பி மயன் ஆகிய இருவரும் இணைந்து இத்தலத்தில் அஷ்டாங்க விமானம் அமைத்தனர். 'ஓம்', 'நமோ', 'நாராயணாய' எனும் 3 பதங்களை உணர்த்தும் விதமாக இந்த விமானம் மூன்று தளங்களாக அமைந்துள்ளது.

மேலும் ராமானுஜர் "ஓம் நாமோ நாராயணா" என உலகிற்கு உபதேசித்த சிறப்பு வாய்ந்தது இந்த கோவில்.

Tags:    

Similar News