வழிபாடு

அவினாசி லிங்கேஸ்வரர் கோவிலில் பாலாலய பூஜை

Published On 2023-07-24 04:57 GMT   |   Update On 2023-07-24 04:57 GMT
  • சிவாச்சாரியர்கள் வேத மந்திரங்கள் சொல்லி யாக பூஜை நடத்தினர்.
  • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

அவினாசியில் உள்ள அவினாசிலிங்கேஸ்வரர் கோவில் கொங்கு ஏழு சிவாலயங்களில் முதன்மையானது.

இங்கு கருணாம்பிகை சமேத அவினாசிலிங்கேஸ்வரர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்த கோவிலில் பல்வேறு கல்வெட்டுகள் உள்ளன. சுந்தரமூர்த்தி நாயனாரால் பதிகம்பாடி முதலை உண்ட பாலகனை உயிருடன் மீட்ட அதிசயம் நடந்த திருத்தலமும் இதுவே.

12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்பது ஐதீகம். சிறப்பு வாய்ந்த இக்கோவில் கும்பாபிஷேகம் நடந்து 15 ஆண்டுகள் கடந்த நிலையில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இக்கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது

அதன்படி கோவில் பரிவார சன்னதி விமானங்கள் பாலாலய பூஜை நேற்று இரவு 7 மணி அளவில் கோவில் மண்டபத்தில் யாகபூஜை நடந்தது.

கோவில் சிவாச்சாரியர்கள் வேத மந்திரங்கள் சொல்லி யாக பூஜை நடத்தினர்.

இதில் குமரகுருபர சுவாமிகள், அவினாசி காமாட்சி தாச சுவாமிகள், கோவில் அறங்காவலர் குழு தலைவர் டாக்டர்ஆ.சக்திவேல், அறங்காவலர்கள் பொன்னுசாமி, ரவி, பிரகாஷ் ஆறுமுகம், கார்த்திகா, உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News