வழிபாடு

வட்டக்கரை புனித சூசையப்பர் ஆலய திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது

Published On 2023-04-27 14:02 IST   |   Update On 2023-04-27 14:02:00 IST
  • 6-ந்தேதி தேர்பவனி நடைபெறுகிறது.
  • 7-ந்தேதி கொடியிறக்கம் நடக்கிறது.

வட்டக்கரை புனித சூசையப்பர் ஆலய திருவிழா நாளை(வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது. விழாவின் முதல் நாளான நாளை மாலை 6 மணிக்கு ஜெபமாலை, 6.30 மணிக்கு மறைமாவட்ட முதன்மை பணியாளர் அருட்பணி கில்லாரியுஸ் தலைமை தாங்கி திருவிழா கொடியை ஏற்றிவைத்து திருப்பலி நிறைவேற்றுகிறார். புதூர் பங்குதந்தை சாம் மேத்யூ மறையுரையாற்றுகிறார்.

விழா நாட்களில் தினமும் மாலை 6 மணிக்கு ஜெபமாலை, 6.30 மணிக்கு திருப்பலி ஆகியவை நடைபெறுகிறது.

விழாவில் 30-ந்தேதி காலை 7 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் தலைமை தாங்கி திருப்பலி நிறைவேற்றி மறையுரையாற்றுகிறார். மாலை 5.30 மணிக்கு நற்கருணை பவனி ஊர்சுற்றி பவனி வருதல் ஆகியவை நடக்கிறது.

விழாவில் வருகிற 6-ந்தேதி ஆயர் இல்லம் இறையியல் பேராசிரியர் அருட்பணி அல்போன்ஸ் தலைமை தாங்கி முதல் திருவிருந்து திருப்பலியை நிறைவேற்றி மறையுரையாற்றுகிறார்.

மாலை 6 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன்சூசை தலைமை தாங்கி நற்கருணை ஆசீர் நிறைவேற்றி மறையுரையாற்றுகிறார். தொடர்ந்து இரவு 9 மணிக்கு தேர்பவனி நடைபெறுகிறது.

விழாவின் இறுதிநாளான 7-ந்தேதி காலை 7 மணிக்கு மறைமாவட்ட பொருளாளர் அருட்பணி அலோசியஸ் தலைமை தாங்கி திருவிழா திருப்பலியை நிறைவேற்றுகிறார். கன்னியாகுமரி வட்டார முதன்மை பணியாளர் அருட்பணி ஜாண்சன் மறையுரையாற்றுகிறார். மாலை 4 மணிக்கு தேர்பவனி, 5 மணிக்கு நற்கருணை ஆசீர், கொடியிறக்கம் ஆகியவை நடைபெறுகிறது.

விழாவுக்கான ஏற்பாடு களை பங்குதந்தை, பங்குபேரவை, அருட்சகோதரிகள், பங்குமக்கள் ஆகியோர் செய்து வருகிறார்கள்.

Tags:    

Similar News