வழிபாடு

ஆலஞ்சி புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய விழா இன்று தொடங்குகிறது

Published On 2023-02-10 06:31 GMT   |   Update On 2023-02-10 06:31 GMT
  • இந்த விழா இன்று தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.
  • 18-ந்தேதி புனிதரின் தேர்பவனி நடக்கிறது.

கோட்டார் மறை மாவட்டத்துக்கு உட்பட்ட ஆலஞ்சி புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய குடும்ப விழா இன்று(வெள்ளிக்கிழமை) மாலை கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.

விழாவின் இன்று காலை 6 மணிக்கு ஜெபமாலை, தொடர்ந்து முன்னோர்களுக்கான திருப்பலியை மேல்மிடாலம் பங்குதந்தை ஹென்றி பிலிப்பு குயின் தலைமை தாங்கி நிறைவேற்றுகிறார். ராமன்துறை பங்குதந்தை சகாய வில்சன் மறையுரையாற்றுகிறார். மாலை 6 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, தொடர்ந்து கொடியேற்றம், திருப்பலி ஆகியவை நடக்கிறது. கொடியேற்றத்துக்கு ஆலஞ்சி மறைவட்ட முதன்மை பணியாளர் பேரருட்பணி தேவதாஸ் தலைமை தாங்குகிறார். ரீத்தாபுரம் பங்குதந்தை ஜேசுதாசன் மறையுரையாற்றுகிறார். இரவு 8 மணிக்கு அன்பிய ஒருங்கிணைப்பு பொதுக்கூட்டம், கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

விழா நாட்களில் தினமும் காலையில் திருப்பலி, மாலையில் ஜெபமாலை, புகழ்மாலை, திருப்பலி ஆகியவை நடக்கிறது.

விழாவில் 12-ந்தேதி காலை 7 மணிக்கு முதல் திருவிருந்து திருப்பலி நடக்கிறது.

விழாவின் 18-ந்தேதி காலை 7 மணிக்கு திருமுழுக்கு, திருமண வெள்ளி விழா மற்றும் பொன்விழா சிறப்பு திருப்பலி, 11 மணிக்கு உடல்நலம் குன்றியோர், முதியோருக்கான சிறப்பு திருப்பலி, இரவு 8 மணிக்கு சிறப்பு வாணவேடிக்கை, தொடர்ந்து நாதஸ்வரம், சிங்காரி மேளம், செண்டை மேளம் முழங்க புனிதரின் தேர்பவனி நடக்கிறது.

விழாவின் இறுதி நாளான 19-ந்தேதி காலை 9 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமையில் திருவிழா சிறப்பு திருப்பலி நடக்கிறது. தொடர்ந்து காலை 11 மணிக்கு புனிதரின் தேர்பவனி, மாலை 5 மணிக்கு திருவிழா நன்றி திருப்பலி, கொடியிறக்கம் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது.

விழாவிற்கான ஏற்பாடுகளை பங்கு இறைமக்கள், அருட்பணி பேரவையினர், பங்குதந்தை ஜோசப், அருட்சகோதரி ஆல்டோ லெபின்சன், புனித அமலவை அருட்சகோதரிகள், ஆலஞ்சி மறைவட்ட முதன்மை பணியாளர் தேவதாஸ் ஆகியோர் செய்து வருகிறார்கள்.

Tags:    

Similar News