வழிபாடு

ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் நடந்து வந்த லட்ச வில்வ, குங்குமார்ச்சனை நிறைவு

Published On 2022-11-24 08:11 GMT   |   Update On 2022-11-24 08:11 GMT
  • ஸ்ரீகாளஹஸ்தி கோவிலில் 11 நாட்கள் லட்ச வில்வ அர்ச்சனை நடந்தது.
  • பூஜை பொருட்கள் சொர்ணமுகி ஆற்றில் கரைக்கப்பட்டது.

திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் 13-ந் தேதியில் இருந்து நேற்று வரை 11 நாட்கள் லட்ச வில்வ அர்ச்சனை, லட்ச குங்கும அர்ச்சனை நடந்தது வந்தது. இறுதி நாளான நேற்று கோவில் வளாகத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் சிறப்பு கலச ஸ்தாபனம் ஏற்பாடு செய்து, யாகம் வளர்க்கப்பட்டு முதலில் கணபதி பூஜை, புண்ணியாவதனம் நடந்தது. கலசத்தில் நிரப்பப்பட்ட புனித நீரால் மூலவர் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், ஞானப்பிரசுனாம்பிகை தாயாருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது.

அலங்கார மண்டபத்தில் இருந்து கடந்த 11 நாட்களாக நடத்திய லட்ச வில்வ, குங்குமார்ச்சனையில் பயன்படுத்திய பூஜை பொருட்கள் சொர்ணமுகி ஆற்றில் கரைக்கப்பட்டது.

Tags:    

Similar News