வழிபாடு

ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் கால பைரவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை

Update: 2022-12-01 07:34 GMT
  • கால பைரவருக்கு கஜமாலை அணிவித்து அலங்காரம் செய்யப்பட்டது.
  • தீப, தூப நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டது.

ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை அன்றும் ஞானப்பிரசுனாம்பிகை சமேத ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரருக்கு ஏகாந்த சேவைக்குப் பின் கால பைரவருக்கு பலவிதமான சுகந்த திரவியங்களால் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடக்கும். அதேபோல் நேற்று முன்தினம் கால பைரவருக்கு அபிஷேக, ஆராதனை நடந்தது. அப்போது கால பைரவருக்கு எழுமிச்சை பழ மாலை, கஜமாலை அணிவித்து அலங்காரம் செய்யப்பட்டது.

அதைத்தொடர்ந்து தீப, தூப நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டது. அதன்பிறகு வேத பண்டிதர்கள் வேத மந்திரங்களை ஓத, மங்கள வாத்தியங்கள் முழங்க காலபைரவர் கோவில் பிரகார உற்சவம் நடந்தது. அதில் கோவில் அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News