வழிபாடு
சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு நாளை அனுமதி
- சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறையினர் தடை விதித்து இருந்தனர்.
- பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
புலிகள் கணக்கெடுப்பு பணிகள் இன்று (வியாழக்கிழமை) முதல் 16 -ந் தேதி வரை நடைபெற இருப்பதால் சொரிமுத்து அய்யனார் கோவில், அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அருவி, மாஞ்சோலை உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறையினர் தடை விதித்து இருந்தனர்.
இந்தநிலையில் நாளை கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்து இருந்தனர்.
அதனை ஏற்று நாளை சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல வனத்துறையினர் அனுமதி வழங்கியுள்ளனர். இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.