வழிபாடு

பூரியில் ரத யாத்திரை விழா இன்று கோலாகல கொண்டாட்டம்

Published On 2022-07-01 07:10 GMT   |   Update On 2022-07-01 07:10 GMT
  • பக்தர்கள் ஜகந்தாதரின் தேர் இழுப்பதை தங்களின் பாக்கியமாக கருதுகின்றனர்.
  • ரத யாத்திரையின் சிறப்பும் மகத்துவமும் உண்மையிலேயே இணையற்றது.

ஒடிசாவின் புனித நகரமான பூரியில் ஜகந்நாதரின் புகழ்பெற்ற ரத யாத்திரை விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த யாத்திரைக்காக ஜகந்நாதர், தேவி சுபத்ரா மற்றும் பலபத்ரா ஆகிய மூன்று ரதங்களும் இழுக்கப்பட்டு நேற்று ஸ்ரீமந்திராவின் சிங்க துவாராவின் முன் நிறுத்தப்பட்டுள்ளன. உரிய சடங்குகளுக்குப் பிறகு யாத்திரை தொடங்குகிறது. விழாவையொட்டி, மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், ஒடிசா காவல்துறை உயர்மட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.

ஒடிசாவின் ரத யாத்திரை, பகவான் விஷ்ணுவின் அவதாரமாகக் கருதப்படும் பகவான் ஜகந்நாதரின் வருடாந்திர பயணத்தை சித்தரிக்கிறது. இறைவனின் கருணை மற்றும் தெய்வீகத்தனமையைக் கொண்டாடும் வகையில் ஒட்டுமொத்த சமூகமும் ஒன்றுசேர்ந்ததைக் காட்டுகிறது.

ரத யாத்திரையில் சேரும் பக்தர்கள் ஜகந்தாதரின் தேர் இழுப்பதை தங்களின் பாக்கியமாக கருதுகின்றனர். ரத யாத்திரையின் சிறப்பும் மகத்துவமும் உண்மையிலேயே இணையற்றது.

Tags:    

Similar News