வழிபாடு

முருகனிடம் திருஊடல் நடத்திய தெய்வானை அம்மன்

Update: 2023-02-08 08:07 GMT
  • வள்ளியும் தெய்வானை அம்மனும் ஒருவரே என்று விளக்கி சமரசம் செய்தார்.
  • முத்துக்குமாரசாமி வள்ளி-தெய்வானைக்கு தீபாராதனை நடைபெற்றது.

தைப்பூச நிறைவு நாளான நேற்று பெரியநாயகி அம்மன் கோவிலில் முத்துக்குமாரசாமி, வள்ளி- தெய்வானைக்கு 16 வகை அபிஷேகம், சிறப்பு அலங்காரம் நடந்தது. பின்னர் புதுச்சேரி சப்பரத்தில் முத்துக்குமாரசாமி வள்ளி- தெய்வானை ரதவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது.

அப்போது, தான் இருக்க வள்ளியை திருமணம் செய்தது ஏன்? என்று முருகனிடம் கோபித்த தெய்வானை அம்மன், சப்பரத்தில் இருந்து இறங்கி தனி பல்லக்கில் பெரியநாயகி அம்மன் கோவில் சென்று நடையை சாத்தி கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து தெய்வானை அம்மனை சமரசம் செய்யும் ஊடல் நிகழ்ச்சி அரங்கேறியது. முதலில் நாரதமுனிவர் தூது சென்று, அவரது முயற்சி தோல்வி அடையவே வீரபாகுதேவர் தெய்வானை அம்மனிடம் தூது செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வீரபாகுதேவராக ஓதுவார் நாகராஜ், 3 முறை தூது சென்று ஊடல் பாடல்களை பாடினார்.

அப்போது வள்ளியும் தெய்வானை அம்மனும் ஒருவரே என்று விளக்கி சமரசம் செய்தார். அதன்பின்னர் கோவில் நடை திறந்து தெய்வானை அம்மன் முத்துக்குமாரசாமியுடன் சேர்ந்து கொள்வதுமான நிகழ்ச்சி நடந்தது. பின்னர் உட்பிரகாரத்தில் வலம் வந்த முத்துக்குமாரசாமி வள்ளி-தெய்வானைக்கு தீபாராதனை நடைபெற்றது. முடிவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Similar News