வழிபாடு

மதுரை புதூர் புனித லூர்து அன்னை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Published On 2023-02-11 06:05 GMT   |   Update On 2023-02-11 06:05 GMT
  • இன்று தேர் பவனி நடைபெறும்.
  • நாளை ஆலயத்தில் பொங்கல் விழா நடக்கிறது.

மதுரை கோ.புதூர் புனித லூர்து அன்னை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. திருச்சி சலேசிய மாநில தலைவர் அகிலன் தலைமையில் கொடியேற்றம் நடைபெற்றது. மதுரை உயர்மறை மாவட்ட பேராயர் அந்தோணி பாப்புசாமி கலந்து கொண்டு திருப்பலி் நடந்தது. விழாவில் இன்று(சனிக்கிழமை) மாலை 6 மணிக்கு திருவிழா திருப்பலி சேலம் முன்னாள் மறை மாவட்ட ஆயர் சிங்கராயர் தலைமையில் நடைபெறுகிறது.

இதைதொடர்ந்து தேர் பவனி நடைபெறும். இந்த தேர் பவனி ஆலயத்தில் இருந்து புறப்பட்டு சந்தன மாதா கோவில் தெரு, பாரதியார் ரோடு, சிங்காரவேலர் தெரு, அழகர்கோவில் ரோடு வழியாக ஆலயத்தை வந்தடையும். இந்த திருவிழாவில் மதுரை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். நாளை(ஞாயிற்றுக்கிழமை) ஆலயத்தில் பொங்கல் விழா நடக்கிறது. அப்போது பொங்கல் வைத்து, உப்பு மிளகு, தலை முடி இறக்கி நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.

விழா ஏற்பாடுகளை பங்கு தந்தையர்கள், அருட்பணி பேரவை மற்றும் இறைமக்கள் செய்துள்ளனர்.

Tags:    

Similar News