வழிபாடு

திருக்கார்த்திகை: இன்று வீடுகளில் தீபம் ஏற்றும் போது பாட வேண்டிய பாடல்

Update: 2022-12-06 06:10 GMT
  • தீப வழிபாட்டில் சிறப்பானது “கார்த்திகை தீபம் ஆகும்”
  • கார்த்திகை மாதத்தில் தினமும் மாலையில் விளக்கேற்றி வழிபட வேண்டும்.

பெருந்தேனிறைக்கும் நறைக்கூந்தற் பிடியே வருக!

முழு ஞானப் பெருக்கே வருக!

பிறை மவுலிப் பெம்மான்

முக்கண்சுடர்க்கு நல் விருந்தே வருக!

முழு முதற்கும் வித்தே வருக!

வித்தின்றி விளைந்த

பரமானந்தத்தின் விளையே வருக!

பழுளையின் குருந்தே வருக!

அருள்பழுத்த கொம்பே வருக!

திருக்கடைக்கண் கொழித்த கருணைப் பெரு வெள்ளம் பிடைவார் பிறவி பிணிக்கோர் மருந்தே வருக!

பசுங்குந்தழலை மழலைக்கிளியே வருக!

மலையத்துவசன் பெற்ற

பெரு வாழ்வே வருக வருகவே!

மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் வரிசையில் வரும் இந்த பாடல் சிவன், மீனாட்சி மற்றும் மகாலட்சுமியை குறித்து பாடுவதாகும். இதைப்பாடுவதால் இருள் என்ற துன்பம் விலகி, மகிழ்ச்சி என்ற ஒளி பிறக்கும் என்பது நம்பிக்கை.

தீப வழிபாட்டில் சிறப்பானது "கார்த்திகை தீபம் ஆகும்" இது கார்த்திகை மாதத்தில் பவுர்ணமி திதியில் கிருத்திகை நட்சத்திரத்தில் வருவது.

'அன்பே தகழியா ஆர்வமே நெய்யாக

இன்புருகு சிந்தை இடுதிரியா என்புருகி

ஞானச்சுடர் விளக்கு ஏற்றனேன் நாரணர்க்கு

ஞானத் தமிழ் புரிந்த நான்'.

என்று சொல்லி கார்த்திகை மாதத்தில் தினமும் மாலையில் விளக்கேற்றி வழிபட வேண்டும். கார்த்திகை தீபத்தன்று அனைவரின் வீடுகளிலும் மாலையில் தீபமேற்றி நெல் மாரியில் உருண்டை செய்து இறைவனுக்கு நைவேத்தியம் வைத்து வழிபட வேண்டும்.

Tags:    

Similar News