வழிபாடு

வருகிற 24-ந் தேதி வரை சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு செல்ல தடை

Published On 2022-07-21 01:56 GMT   |   Update On 2022-07-21 01:56 GMT
  • கடந்த 12-ந் தேதி முதல் சாலை புதுப்பிப்பு பணிகள் தொடங்கியது.
  • அகஸ்தியர் அருவிக்கும் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலையில் காரையாறு அணை, சொரிமுத்து அய்யனார் கோவில், அகஸ்தியர் அருவி உள்ளிட்ட சுற்றுலா தலங்களும், பழங்குடி இன மக்கள் வசித்து வரும் மயிலாறு காணி, அகஸ்தியர் காணி குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளும் உள்ளது.

பாபநாசம் வனச்சோதனை சாவடியில் இருந்து காரையாறு அணை வரை சுமார் 14 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை சேதமடைந்து காணப்பட்ட நிலையில் கடந்த 12-ந் தேதி முதல் சாலை புதுப்பிப்பு பணிகள் தொடங்கியது. இதனால் இந்த சாலை பணிகள் நேற்று வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இதனால் சுற்றுலா பயணிகள், பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் சாலைப்பணிகள் முழுமையாக நிறைவடையாமல் இருப்பதால் இந்த தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது.

அதாவது வருகிற 24-ந் தேதி வரை அகஸ்தியர் அருவி, சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு செல்ல தடையை நீட்டித்துள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News