வழிபாடு

கமலவல்லி நாச்சியார் கோவிலில் உள்கோடை உற்சவம் தொடங்கியது

Published On 2023-05-23 06:20 GMT   |   Update On 2023-05-23 06:20 GMT
  • 26-ந்தேதி வரை உள்கோடை உற்சவம் நடைபெறுகிறது
  • 26-ந்தேதி அன்று மட்டும் வீணை வாத்தியம் கிடையாது.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உபகோவிலான திருச்சி உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் கோடை திருநாள் எனும் வசந்த உற்வசம் கடந்த 17-ந்தேதி தொடங்கியது. அன்று முதல் நேற்று முன்தினம் வரை வெளிக்கோடை உற்சவம் நடைபெற்றது.

இதையொட்டி தினமும் காலை 5.30 மணிக்கு தாயார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடாகி, மாலை 6.45 மணி முதல் இரவு 7 மணி வரை புஷ்பம் சாத்துப்படி கண்டருளினார். இரவு 7 மணி முதல் 7.15 மணி வரை தீர்த்த கோஷ்டி நடைபெற்றது. பின்னர் பொதுஜன சேவை முடிந்ததும் இரவு 8.30 மணிக்கு தாயார் புறப்பாடாகி 8.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.

இ்ந்தநிலையில் நேற்று உள்கோடை உற்சவம் தொடங்கியது. இதையொட்டி நேற்று மாலை 5.30 மணிக்கு தாயார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடாகி, மாலை 5.45 மணி முதல் 6 மணி வரை புஷ்பம் சாத்துப்படி கண்டருளினார். பின்னர் மாலை 6 மணி முதல் 6.15 மணி வரை தீர்த்த கோஷ்டி நடைபெற்றது.

பின்னர் அங்கிருந்து மாலை 6.30 மணிக்கு தாயார் உள்கோடை மண்டபம் சேர்ந்தார். அங்கு 6.45 மணிக்கு அலங்காரம் அமுது செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து இரவு 7 மணி முதல் 7.30 மணி வரை திருவாராதனம், வெள்ளிச்சம்பா அமுது செய்யப்பட்டு தீர்த்த கோஷ்டி நடைபெற்றது.

இரவு 7.30 மணி முதல் 8.30 மணி வரை பொதுஜன சேவை நடைபெற்றது. பின்னர் இரவு 8.45 மணிக்கு தாயார் வீணை வாத்தியத்துடன் புறப்பட்டு இரவு 9.15 மணிக்கு மூலஸ்தானம் சேர்ந்தார். வருகிற 26-ந்தேதி வரை உள்கோடை உற்சவம் நடைபெறுகிறது. 26-ந்தேதி அன்று மட்டும் வீணை வாத்தியம் கிடையாது.

Tags:    

Similar News