ஜென்ம குருவால் ராமருக்கு ஏற்பட்ட மாற்றம்...
- ஜென்ம ராசியில் குரு சஞ்சரிக்கும் பொழுது பயணங்கள் அதிகரிக்கும்.
- குரு வழிபாட்டின் மூலம் குதூகலமான வாழ்க்கை அமையும்.
புராண காலத்தில் குருவால் ஏற்பட்ட மாற்றங்களை எடுத்துரைக்கும் பாடலைப் பாருங்கள்....
ஜென்ம ராமல் வனத்திலே
சீதையைச் சிறை வைத்ததும்,
தீதிலா தொரு மூன்றிலே
துரியோதனன் படை மாண்டதும்
இன்மை எட்டினில் வாலி
பட்டமிழந்து போம் படியானதும்
ஈசனார் ஒரு பத்திலே
தலையோட்டிலே யிரந்துண்டதும்
தருமபுத்திரர் நாலிலே
வனவாசம் அப்படிப் போனதும்
சத்திய மாமுனி ஆறிலே
இரு காலிலே தளை பூண்டதும்
வன்மை யற்றிட ராவணம் முடி
பனிரெண்டினில் வீழ்ந்ததும்
மன்னும் மாகுரு சாரி
மாமனை வாழ்விலா துறமென்பவே!
இந்தப்பாடல் மூலம் நாம் அறிந்து கொள்வது ராமர் வனவாசம் சென்ற பொழுது அவருக்கு ஜென்ம குரு ஆதிக்கம் இருந்திருக்கின்றது. அதுதான் வனவாசம் சென்றதற்கு காரணம்.
ஜென்ம ராசியில் குரு சஞ்சரிக்கும் பொழுது பயணங்கள் அதிகரிக்கும். ஆதிபத்யம் நன்றாக இருந்தால் எதைப்பற்றியும் கவலைப்படத் தேவையில்லை. வழிபாடே வளர்ச்சி கூட்டும். இப்படியிருக்குமோ, அப்படியிருக்குமோ என்று மனக்குழப்பம் அடைய வேண்டாம். எதிர்மறைச் சிந்தனைகளைத் தவிர்க்கவும். நேர்மறைச் சிந்தனைகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். குரு வழிபாட்டின் மூலம் குதூகலமான வாழ்க்கை அமையும்.