வழிபாடு

அம்மன் எழுந்தருளிய காட்சியை படத்தில் காணலாம்.

இட்டகவேலி நீலகேசி அம்மன் கோவிலில் அம்மயிறக்க திருவிழா தொடங்கியது

Published On 2023-03-23 05:35 GMT   |   Update On 2023-03-23 05:35 GMT
  • 28-ந்தேதி தூக்க நேர்ச்சை நடக்கிறது.
  • 31-ந்தேதி பொங்கல் வழிபாடு நடக்கிறது.

குலசேகரம் அருகே உள்ள இட்டகவேலியில் 700 ஆண்டுகள் பழமை வாய்ந்த நீலகேசி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் அம்மயிறக்க திருவிழா நேற்று தொடங்கியது.

இதையொட்டி நேற்று காலையில் பொன்மனை அருகே கிழக்கம்பாகத்தில் கோவில் பூசாரிகளை வரவேற்கும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து பூசாரிகள் மரவூர் கண்டன் சாஸ்தா கோவில், மங்கலம் பத்ரகாளியம்மன் கோவில், அரசமூடு விநாயகர் கோவில், காவல்ஸ்தலம் முத்தாரம்மன் கோவில், செருப்பாலூர் முத்தராம்மன் கோவில், இட்டகவேலி பாதிரிமேல் கண்டன்சாஸ்தா கோவில் என வரும் வழிகளில் உள்ள கோவில்களில் வணங்கி விட்டு இறுதியாக பனங்கோடு தெக்கதில் உள்ள கோவிலில் வணங்கினர்.

பின்னர் பூசாரிகளிடம் சாவிதானம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து விழா பந்தல் நோக்கி வெள்ளிப்பிள்ளை எழுந்தருளுதல், கணபதி கோவில் மற்றும் காவில் பூஜைகள் நடைபெற்றது. இதையடுத்து கோவிலில் பூஜைகள் நடத்தப்பட்டது. மதியம் 2 மணிக்கு அம்மயிறக்க நிகழ்ச்சி திரளான பக்தர்கள் புடைசூழ நடந்தது. அதைதொடர்ந்து அம்மனுக்கு அஸ்டதிக் பூஜைகள் நடத்தப்பட்ட விழா பந்தல் நோக்கி எழுந்தருளும் நிகழ்ச்சி, திருவிழா பந்தலில் அஷ்டதிக் பூஜைகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகளில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

விழாவில் 26-ந் தேதி 2007 திருவிளக்கு பூஜை, 28-ந் தேதி தூக்க நேர்ச்சை நடைபெறுகிறது. தொடர்ந்து 30-ந் தேதி கமுகு எழுந்தருளுதல், விழாவின் இறுதிநாளான 31-ந் தேதி பொங்கல் வழிபாடு ஆகியவை நடைபெறுகிறது.

Similar News