வழிபாடு

எந்த தெய்வத்தை எந்த திசையில் வைத்து வழிபட வேண்டும்

Published On 2023-07-06 15:00 IST   |   Update On 2023-07-06 15:00:00 IST
  • எந்த தெய்வத்தை எந்த திசையில் வைத்து வழிபட வேண்டும் என்று, சாஸ்திர நியதி இருக்கிறது.
  • அந்த திசையில் வைத்து வழிபட்டால் அற்புதமான பலன் கிடைக்கும்.

பெரும்பாலும் வீட்டின் பூஜை அறையில் கிழக்கு திசை நோக்கி பார்த்தபடி வைத்துதான் தெய்வங்களை வழிபாடு செய்வார்கள். எந்த தெய்வத்தை எந்த திசையில் வைத்து வழிபட வேண்டும் என்று, சாஸ்திர நியதி இருக்கிறது.

அந்த திசையில் வைத்து வழிபட்டால் அற்புதமான பலன் கிடைக்கும். நடராஜர் படமும், குரு தட்சிணாமூர்த்தியின் படமும் தெற்கில் பார்க்கும் விதத்தில் வைத்து வழிபட்டால் தான் சிறப்பான பலன்களை நீங்கள் காண முடியும்.

நடராஜர் படத்தை திருவாதிரையன்று பூஜை அறையில் வைத்து சிவபுராணம் படித்தால், கலைகளில் தேர்ச்சி பெறும் வாய்ப்பு கிட்டும். தட்சிணாமூர்த்தி படத்தை உத்ரம் நட்சத்திரம் அன்று வழிபட வேண்டும். அங்ஙனம் வழிபட்டால் வளர்ச்சி கூடும்.

Similar News