வழிபாடு

கல்லுப்பாலம் இசக்கிஅம்மன் கோவிலில் பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி

Update: 2023-03-22 07:16 GMT
  • பொங்கல் வழிபாடு நடந்தது
  • திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

ஆற்றூர் கல்லுப்பாலம் இசக்கியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனிகொடை விழா 5 நாட்கள் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான விழா கடந்த 17-ந் தேதி தொடங்கி திருவிளக்கு பூஜை நடந்தது.

4-வது நாளான நேற்று முன்தினம் நள்ளிரவு பூக்குழிஇறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாலையிட்டு விரதமிருந்த பக்தர்கள் ஆலயத்தின் முன்பு அமைக்கபட்ட பூக்குழியில் இறங்கி தங்கள் நேர்த்திகடனை செலுத்தினர். இதில் குமரி மாவட்டம் மட்டுமல்லாமல், கேரளாவில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். மேலும் சிலர் வேல்குத்தியும், காவடி எடுத்தும் நேர்த்திகடனை செலுத்தினார்கள்.

இறுதி நாளான நேற்று பொங்கல் வழிபாடு நடந்தது.

Similar News