வழிபாடு

சீர்காழி அருகே சையது யாசின் மவுலானா தர்காவில் கந்தூரி விழா

Published On 2023-06-08 05:09 GMT   |   Update On 2023-06-08 05:09 GMT
  • யாசின் மவுலானா இறையடி சேர்ந்த தினமான கந்தூரி விழா நடைபெறுவது வழக்கம்.
  • சிறப்புத்துவா ஓதி வழிபாடு நடைபெற்றது.

சீர்காழியை அடுத்த திருமுல்லைவாசலில் இஸ்லாமியர்களின் இறை தூதர் நபிகள் நாயகத்தின் வம்சாவழி பேரன் ஜமாலியா சையது யாசின் மவுலானா தர்கா அமைந்துள்ளது. தமிழகம் மற்றும் இலங்கை வாழ் முஸ்லிம்களின் ஆன்மிக குருவாக விளங்கிய இவர் இந்தியா மற்றும் கீழ்திசை நாடுகளில் இஸ்லாமிய ஆன்மிகத்தை பரப்பியவர்.

இறுதியாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள திருமுல்லைவாசலில் 1964-ம் ஆண்டு நல்லடக்கம் செய்யப்பட்டார். அங்கு அவருக்கு தர்கா அமைத்து வழிபட்டு வருகின்றனர். ஆண்டு தோறும் யாசின் மவுலானா இறையடி சேர்ந்த தினமான கந்தூரி விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் நடைபெற்ற விழாவில் தஞ்சை, சென்னை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், இலங்கை, லண்டன், துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் மவுலானாவின் கலிபாக்கள், சீடர்கள், பக்தர்கள் கலந்துகொண்டனர்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு வைபவம் இன்று விமர்சையாக நடைபெற்றது. சந்தன குடம் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு சையது மவுலானா சமாதியில் சந்தனம் பூசும் வைபவம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து சிறப்புத்துவா ஓதி வழிபாடு நடைபெற்றது. மேலும் மத நல்லினக்கத்தையும் ஒற்றுமையையும் வெளிபடுத்தும் விதமாக அனைத்து மதங்களையும் சேர்ந்தவர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.

Tags:    

Similar News