வழிபாடு

தம்பதி சமேதராக தட்சிணாமூர்த்தி காட்சி தரும் கோவில்

Published On 2022-09-14 05:55 GMT   |   Update On 2022-09-14 05:55 GMT
  • நாம் பல ஆலயங்களில் பலவிதமான தட்சிணாமூர்த்தியை காணலாம்.
  • தேவியுடன் வீற்றிருக்கும் தட்சிணாமூர்த்தியன் திருக்கோலம் உலகின் வேறெங்கும் காண முடியாது.

நாம் பல ஆலயங்களில் பலவிதமான தட்சிணாமூர்த்தியை காணலாம்.

ஞான தட்சிணாமூர்த்தி, யோக தட்சிணாமூர்த்தி, விணா தட்சிணாமூர்த்தி, மேதா தட்சிணாமூர்த்தி என்று பலவிதமான தட்சிணாமூர்த்தியை பல ஆலயங்களில் தரிசித்து இருக்கிறோம்.

ஆனால் சுருட்டப்பள்ளியில், இந்த புனிதத் திருத்தலத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி தன் மனைவியுடன் மிக அழகான சிலை வடிவில் வேறெங்கும் காணமுடியாத வகையில் காணும் பக்தர்க்கெல்லாம் அருள் காட்சியளிக்கிறார். அம்பாள் கவுரி வாமபாகத்தில் இருந்து ஆலிங்கனம் செய்து கொள்ளும் காட்சியே தம்பதிசமேத தட்சிணாமூர்த்தி ஆகும்.

"மதிநுதல் மங்கையோடு வடவாலிந்து

மறையோதும் எங்கள் பரமன்"

என்று திருஞானசம்பந்தர் தம்பதி சமோதரர்களாக விளங்கும் தம்பதிசமேத தட்சிணாமூர்த்தியை சிறப்பிக்கிறார்.

சாந்த சொரூபமாக தனது இடதுபுறத்தில் தனது தேவியுடன் வீற்றிருக்கும் தட்சிணாமூர்த்தியன் திருக்கோலம் உலகின் வேறெங்கும் காண முடியாது.

சுருட்டப்பள்ளியில் உள்ள இந்த தாம்பத்திய தட்சிணாமூர்த்தியை வணங்குபவர்களுக்கு ஞானம், கல்வி, குழந்தைப்பேறு, திருமண பாக்கியம், மாங்கல்ய பாக்கியமும், சகல மங்களங்களையும் பெறுவார்கள்.

பள்ளிகொண்டீஸ்வரரை வலம் வந்து வணங்குவோம். பாரினிலே பல்லாண்டு காலம் மங்களமாய் வாழ்வோம். இந்த திருத்தலத்தில் மூலவரான ஸ்ரீ பள்ளி கொண்டீஸ்வரின் சன்னதியில் பக்தர்களின் தலைமீது சடாரி சார்த்துவார்கள். காரணம் ஈஸ்வரனின் பாத தரிசனம் இருப்பதால் சடாரி பக்தர்களின் தலைமீது சார்த்துகிறார்கள். உள்ளே மகாவிஷ்ணு இருப்பதால் தீர்த்தப் பிரசாதமும் தருகிறார்கள்.

விசேஷ தினங்கள்

தினமும் காலை 6.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் ஆலயம் திறந்து இருக்கும்.

ஒவ்வொரு பிரதோஷ தினமும், திருவாதிரை, மகா சிவராத்திரி, ஆங்கில, தமிழ், தெலுங்கு வருடப்பிறப்பு நாட்கள், நவராத்திரி ஆகிய தினங்களில் விசேஷ பூஜை வழிபாடுகள் நடைபெறும்.

Tags:    

Similar News