வழிபாடு

பிரமோற்சவ விழாவையொட்டி கொடியேற்றிய போது எடுத்த படம்.

திருத்தணி முருகன் கோவில் சித்திரை மாத பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது

Published On 2023-04-26 07:28 GMT   |   Update On 2023-04-26 07:28 GMT
  • 2-ம் தேதி தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது.
  • 4-ம் தேதி தீர்த்தவாரியுடன் சித்திரை பெருவிழா நிறைவு பெறுகிறது.

திருத்தணி முருகன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் பிரமோற்சவ விழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

12 நாட்கள் நடக்கும் இந்த விழாவில் புலி வாகனம், வெள்ளி மயில் வாகனம், சிங்க வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் உற்சவர் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் காலை, இரவு என இரு வேளைகளில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

அந்த வகையில், இந்த ஆண்டின் சித்திரை மாத பிரமோற்சவ விழா நேற்று முன்தினம் இரவு கோவில் வளாகத்தில் விநாயகர் உலாவுடன் தொடங்கியது. இதையடுத்து நேற்று காலை 6 மணி முதல் 7 மணிக்குள் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது.

சித்திரை பெருவிழாவின் முக்கிய நிகழ்வான மரதேர் திருவிழா அடுத்த மாதம் 1-ம் தேதியும், 2-ம் தேதி தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது. 4-ம் தேதி கொடி இறக்கம், தீர்த்தவாரியுடன் சித்திரை பெருவிழா நிறைவு பெறுகிறது.

விழாவிற்கான ஏற்பாடுகளை முருகன் கோவில் துணை ஆணையர் விஜயா மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News