வழிபாடு

உடையப்பன்குடியிருப்பு நாராயணசாமி கோவிலில் திருஏடு வாசிப்பு திருவிழா நாளை தொடங்குகிறது

Update: 2022-12-01 06:44 GMT
  • திருவிழா நாளை தொடங்கி 18-ந்தேதி வரை நடக்கிறது.
  • 18-ந்தேதி திருஏடு வாசிப்பு நிறைவு நிகழ்ச்சி நடைபெறும்.

நாகர்கோவில் அருகே உள்ள உடையப்பன் குடியிருப்பு நாராயணசாமி கோவிலில் கார்த்திகை திருஏடு வாசிப்பு திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி 18-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை நடக்கிறது. நாளை காலை 6 மணிக்கு பணிவிடை, மதியம் 12 மணிக்கு பணிவிடை, உச்சி படிப்பு, மாலை 6 மணிக்கு பணிவிடை, திருஏடு வாசிப்பும், இரவு 8 மணிக்கு இனிமம் வழங்குதல் போன்றவை நடைபெறுகிறது.

நிகழ்ச்சியில் காற்றாடித்தட்டை சேர்ந்த டி.ராஜா, நங்கூரான்பிலாவிளையை சேர்ந்த பிரபா, மேலஉடையப்பன்குடியிருப்பை சேர்ந்த பி.பாலகிருஷ்ணன், உடையப்பன்குடியிருப்பை சேர்ந்த எஸ். நாராயணமணி ஆகியோர் திருஏடு வாசிக்கிறார்கள். அகிலத்திரட்டு பாராயண பேருரையை புதூரை சேர்ந்த நாஞ்சில் சி. அசோகன் நிகழ்த்துகிறார்.

தொடர்ந்து வருகிற விழா நாட்களில் பணிவிடை, உச்சிப்படிப்பு, உகப்படிப்பு, திருஏடு வாசிப்பு, இனிமம் வழங்குதல் போன்றவை நடக்கிறது. 16-ந் தேதி அய்யாவின் வாகனபவனியும், திருக்கல்யாண திருஏடு வாசிப்பும், 18-ந் தேதி திருஏடு வாசிப்பு நிறைவு நிகழ்ச்சியும் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை ஊர் தலைவர் எம்.தங்க கிருஷ்ணன் மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து செய்துள்ளனர்.

Tags:    

Similar News