மேலசங்கரன் குழிநாராயணசாமி கோவில் திருவிழா இன்று தொடங்குகிறது
- 23-ந்தேதி திருகல்யாண ஏடுவாசிப்பு நடக்கிறது.
- 25-ந் தேதி பட்டாபிஷேகம் நடைபெறும்.
மேலசங்கரன்குழியில் நாராயணசாமி கோவில், முத்தாரம்மன் கோவில் உள்ளன. இங்கு நாராயணசாமி கோவிலில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை மற்றும் வருடாந்திர திருவிழா இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது.
இன்று காலை 6 மணிக்கு புதிய கொடிமரம் நாட்டுதல், 6.30 மணிக்கு இனிமம் வழங்குதல், மாலை 6 மணிக்கு சாமிக்கு பணிவிடை, இரவு 7 மணிக்கு ஆன்மிக உரை ஆகியவை நடக்கிறது. நிகழ்ச்சியில் ஊர் தலைவர் மிக்கேல் ஜார்ஜ் தலைமை தாங்குகிறார். ஊராட்சி மன்ற தலைவர் முத்து சரவணன் முன்னிலை வகிக்கிறார். அரசம்பதி சிவச்சந்திரன் ஆன்மிக உரை நிகழ்த்துகிறார். இரவு 9.30 மணிக்கு அன்னதர்மம் நடைபெறும்.
நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணிக்கு சாமிக்கு பணிவிடை, இரவு 7 மணிக்கு ஆன்மிக உரை, இரவு 9 மணிக்கு அன்னதர்மம் ஆகியவை நடைபெறும். ஆன்மிக உரையை எள்ளுவிளை குட்டி கிருபானந்தவாரியார் பிள்ளையார் நயினார் நிகழ்த்துகிறார்.
தொடர்ந்து வருகிற விழா நாட்களில் சாமிக்கு பணிவிடை, அன்னதர்மம், பட்டிமன்றம் போன்றவை நடைபெறும். விழாவில் வருகிற 9-ந் தேதி இரவு 7 மணிக்கு மின்னொளி கபடி பேட்டி நடக்கிறது. போட்டியை தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. தொடங்கி வைக்கிறார். வருகிற 11-ந் தேதி இரவு 7 மணிக்கு மாவட்ட அளவிலான மின்னொளி சிலம்பாட்ட ேபாட்டி நடைபெறும். 12-ந் தேதி தேவார திருவாசக பஜனை, 15-ந் தேதி இரவு 8 மணிக்கு நவீன வில்லிசை ஆகியவை நடைபெறும்.
16-ந் தேதி காலை 7.30 மணிக்கு கொடியேற்றம், மாலை 5 மணிக்கு சாமிக்கு பணிவிடை, 5.30 மணிக்கு திருஏடு வாசிப்பு, இரவு 9 மணிக்கு அன்னதானம் போன்றவை நடைபெறும். தொடர்ந்து 17-ந் ேததி முதல் 25-ந் தேதி வரை சாமிக்கு பணிவிடை, திருஏடு வாசிப்பு, அன்னதானம் வழங்குதல் போன்றவை நடைபெறும்.
23-ந் தேதி இரவு 8 மணிக்கு மாபெரும் அன்னதானமும், 8.30 மணிக்கு திருகல்யாண ஏடுவாசிப்பும், 25-ந் தேதி மாலை 6.30 மணிக்கு திருஏடு வாசிப்பு பட்டாபிஷேகமும் நடைபெறும்.
26-ந் தேதி மாலை 3 மணிக்கு சாமி கோவிலில் பவனி வருதல், இரவு 7.30 மணிக்கு திருவிளக்கு பூஜையும், 30-ந் தேதி காலை 10 மணிக்கு கீதா பாராயணம், இரவு 8.30 மணிக்கு வாணவேடிக்கை, 9 மணிக்கு சாமி அலங்கார வாகனத்தில் பவனி வருதல் ஆகியவையும் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்துள்ளனர்.