திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதாரபதியில் திருஏடு வாசிப்பு திருவிழா 17 நாட்கள் நடக்கிறது
- 23-ந் தேதி திருக்கல்யாணம் நடக்கிறது.
- 25-ந்தேதி பட்டாபிஷேகம் நடக்கிறது.
திருச்செந்தூர் கடற்கரையோரம் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதாரபதியில் நேற்று திருஏடு வாசிப்பு திருவிழா தொடங்கியது. இத்திருவிழா வருகிற 25-ந் தேதி வரை 17 நாட்கள் நடக்கிறது. திருஏடு வாசிப்பு நிகழ்ச்சியை அய்யாவழி அகில திருக்குடும்ப மக்கள் சபை தலைவர் வள்ளியூர் எஸ்.தர்மர் தொடங்கி வைத்தார். பின்னர் வைகுண்ட மகாராஜன் குழுவினர் திருஏடு வாசித்தனர்.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான 15-ம்திருநாளன்று (23-ந் தேதி) மாலை 3 மணிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. தொடர்ந்து மாலை 5 மணிக்கு அய்யா வைகுண்டர் புஷ்ப வாகன பவனி நடக்கிறது.
வருகிற 25-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 3 மணிக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து அன்று மாலை 5 மணிக்கு அய்யா வைகுண்டர் புஷ்ப வாகன பவனி நடக்கிறது.
நிகழ்ச்சியில், திருச்செந்தூர் நகராட்சி ஆணையாளர் வேலவன், அய்யாவழி அகில திருக்குடும்ப மக்கள் சபை செயலாளர் பொன்னுத்துரை, இணை தலைவர்கள் விஜயகுமார், பால்சாமி, இணை செயலாளர்கள் ராதாகிருஷ்ணன், செல்வின், நிர்வாக குழு உறுப்பினர் தனசேகரன், உறுப்பினர்கள் வினோத், கண்ணன், சிவாஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்.