வழிபாடு

மந்தவெளியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா: அலகு குத்தி அந்தரத்தில் வந்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

Published On 2022-08-06 07:47 GMT   |   Update On 2022-08-06 07:47 GMT
  • மந்தவெளியம்மன் உள்ளிட்ட 7 சுவாமிகள் திருவீதி உலா நடைபெற்றது.
  • சுமார் 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

திருவள்ளூர் அடுத்த பேரம்பாக்கத்தில் உள்ள மந்தவெளியம்மன் கோவிலில் 10-ம் ஆண்டு தீமிதி திருவிழா நடைபெற்றது. இதற்கான விழா கடந்த 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது. காலை, மாலை இருவேளையும், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் செய்யப்பட்டு அம்மன் கரகம் திருவீதி உலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான தீ மிதி திருவிழா நடைபெற்றது.

பேரம்பாக்கம் மற்றும் சுற்றுப்புற பகுதியை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் காப்பு கட்டி விரதம் இருந்து தீ மிதித்து அம்மனுக்கு நேர்த்திக் கடன் செலுத்தினார்கள்.

மந்தவெளியம்மன் உள்ளிட்ட 7 சுவாமிகள் திருவீதி உலா நடைபெற்றது. அப்போது பெரிய ராட்சத கிரேன் மூலம் உடலில் அலகு குத்திக் கொண்ட பக்தர்கள் அந்தரத்தில் பறந்து வந்து அம்மனுக்கு மாலை அணிவித்தும், கற்பூர தீபாராதனை காண்பித்தும் சிறப்பு வழிபாடு செய்தனர்.

பேரம்பாக்கம் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த சுமார் 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

அதை தொடர்ந்து வண்ண வண்ண மலர்களாலும், வண்ண வண்ண மின்விளக்குகளாலும் அலங்காரம் செய்யப்பட்ட வாகனத்தில் அம்மன் திருவீதி உலா நடைபெற்றது.

Tags:    

Similar News