வழிபாடு

இட்டகவேலி நீலகேசி அம்மன் கோவிலில் அம்மயிறக்கத் திருவிழா 21-ம்தேதி தொடங்குகிறது

Published On 2023-03-20 05:56 GMT   |   Update On 2023-03-20 05:56 GMT
  • 26-ந் தேதி 2007 திருவிளக்குப் பூஜை நடைபெறும்.
  • 28-ந்தேதி தூக்க நேர்ச்சை விழா நடக்கிறது.

குலசேகரம் அருகே இட்டகவேலியில் நீலகேசி அம்மன் முடிப்புரை கோவில் உள்ளது. இந்த கோவில் சுமார் 700 ஆண்டுகள் பழமையானது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் அம்மயிறக்கத் திருவிழா மற்றும் தூக்க நேர்ச்சை திருவிழா நடைபெறும்.

இந்த ஆண்டுக்கான திருவிழா நாளை மறுநாள் (புதன்கிழமை) தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது. இதையொட்டி நாளை மறுநாள் காலை 7 மணிக்கு பொன்மனை அருகே உள்ள கிழக்கம்பாகம் சந்திப்பில் கோவில் பூசாரிகளுக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. காலை 10 மணிக்கு சாவிதானம், 10.30 மணிக்கு விழா பரம்பு நோக்கி வெள்ளிப்பிள்ளை எழுந்தருளல், பிற்பகல் 2 மணிக்கு கோவிலில் இருந்து செண்டை மேளம் முழங்கத்துடன் அம்மயிறக்க நிகழ்ச்சி, 3.30 மணிக்கு அம்மன் விழா பரம்புக்கு எழுந்தருளல் போன்றவை நடைபெறும்.

தொடர்ந்து வருகிற விழா நாட்களில் சிறப்பு பூஜைகள், அன்னதானம் போன்றவை நடக்கிறது. 26-ந் தேதி மாலை 6 மணிக்கு 2007 திருவிளக்குப் பூஜை நடைபெறும். 28-ந் தேதி தூக்க நேர்ச்சை விழா நடக்கிறது. இதையொட்டி குத்தியோட்டம், பூமாலை, தாலப்பொலி, மஞ்சள் குடம், துலாபாரம், பிடிப்பணம், உருள் நேர்ச்சைகள் உள்ளிட்ட நேர்ச்சைகள் நிறைவேற்றப்படும்.

30-ந் தேதி மாலையில் கமுகு எழுந்தருளல் நிகழ்ச்சி நடக்கிறது. விழாவின் இறுதி நாளான 31- ந் தேதி மாலை 4 மணிக்கு பொங்கல் வழிபாடு நடைபெறும்.

இதற்கான ஏற்பாடுகளை இட்டகவேலி நீலகேசி அம்மா சேவா டிரஸ்ட் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.

Similar News