அடைக்கலம் காத்த அய்யனார் கோவில் குடமுழுக்கு நாளை நடக்கிறது
- இன்று கோபூஜை, அஷ்டபந்தன மருந்து சாத்துதல் ஆகியவை நடக்கிறது.
- திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்கின்றனர்.
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் பாவாஜிக்கோட்டை கிராமத்தில் அடைக்கலம் காத்த அய்யனார் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள் முடிவடைந்து நாளை(ஞாயிறுக்கிழமை) குடமுழுக்கு நடக்கிறது. விழாவையொட்டி இன்று(சனிக்கிழமை) காலை 8.30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம், தனபூஜை, கோபூஜை ஆகியவையும், மாலை 5 மணிக்கு கும்ப அலங்காரம், யாகசாலை பிரவேசம், முதல் கால யாக பூஜை, அஷ்டபந்தன மருந்து சாத்துதல் ஆகியவை நடக்கிறது.
நாளை காலை 6 மணிக்கு 2-ம் கால யாகசாலை பூஜை தொடக்கம், தீபாராதனையும், 9.45 மணிக்கு கடம்புறப்பாடு, 10 மணிக்கு விமான குடமுழுக்கும், 10.15 மணிக்கு மூலவர் குடமுழுக்கும் நடக்கிறது.
இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்கின்றனர்.
இதற்கான ஏற்பாடுகளை அத்திவெட்டி மறவக்காடு முத்துவைரவ ஆகாசம் சேர்வைக்காரர், பாலோஜி ரெகுநாதசமுத்திரம் கிராம மக்கள், பாவாஜிக்கோட்டை கிராம மக்கள் செய்து வருகின்றனர்.