வழிபாடு

சமுக்தியாம்பிகை கோவிலில் ஸ்ரீ சக்கர பிரதிஷ்டை விழா 11-ம்தேதி தொடங்குகிறது

Published On 2022-08-09 07:52 GMT   |   Update On 2022-08-09 07:52 GMT
  • ஸ்ரீ சக்கரத்தை வழிபட்டால் வியாதிகள் விலகி மன அமைதி, வாழ்வில் மகிழ்ச்சி ஏற்படும் என்பது ஐதீகம்.
  • சக்கர பிரதிஷ்டை வருகிற 12-ந்தேதி காலை 9 மணிக்கு நடைபெறுகிறது.

பொள்ளாச்சியை அடுத்த அங்கலகுறிச்சி தாடகைமலை அடிவாரத்தில் உள்ள ஆத்மநாதவனத்தில் சமுக்தியாம்பிகையம்மன், சரபேஸ்வரர், காலபைரவர் ஆகியோர் தனித்தனி சன்னதியில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். இந்த கோவிலில் ஸ்ரீசக்கர பிரதிஷ்டை விழா நாளை மறுநாள்(வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு கணபதி ஹோமத்துடன் தொடங்குகிறது.

இதையடுத்து நவக்கிரம ஹோமம், சுதர்சன ஹோமம், மகாலட்சுமி ஹோமம் ஆகியவை நடைபெறுகிறது. காலை 11.30 மணிக்கு பூர்ணாகுதி, தீபாராதனை, மாலை 4.30 மணிக்கு மகாசங்கல்பம், புண்யாக வாசனம், பஞ்சகவ்யம், ஸ்ரீசக்ர கலச ஆவாசனம், மூல மந்திர வேதபாராயணம், வாஸ்து சாந்தி, வேள்வி பூஜைகள் நடைபெறுகிறது.

ஸ்ரீ சக்கரத்தை வழிபட்டால் வியாதிகள் விலகி மன அமைதி, வாழ்வில் மகிழ்ச்சி ஏற்படும் என்பது ஐதீகம். அத்தகைய சக்கர பிரதிஷ்டை வருகிற 12-ந்தேதி காலை 9 மணிக்கு நடைபெறுகிறது. அன்றைய தினம் ஸ்ரீ சுக்ர தேவியின் மூல மந்திரம், 1 லட்சம் முறை ஜப பாராயணம், 10 ஆயிரம் முறை மூல மந்திர மகா யாகம், அபிஷேக, அலங்கார ஆராதனைகள் நடைபெறுகிறது.

பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இரவு 7.30 மணிக்கு மகா தீபாராதனை சிறப்பு பூஜைகள் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News