வழிபாடு
வேளுக்குடி அங்காளபரமேஸ்வரி கோவிலில் அமாவாசை வழிபாடு

வேளுக்குடி அங்காளபரமேஸ்வரி கோவிலில் அமாவாசை வழிபாடு

Published On 2022-05-31 06:02 GMT   |   Update On 2022-05-31 06:02 GMT
வேளுக்குடி அங்காளபரமேஸ்வரி கோவிலில் அமாவாசை வழிபாடு நடந்தது. இதில் தி்ரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கூத்தாநல்லூர் அருகே உள்ள வேளுக்குடியில் அங்காளபரமேஸ்வரி கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று அமாவாசையையொட்டி அம்மனுக்கு பால், மஞ்சள் பொடி, தயிர், சந்தனம், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், தேன் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் அம்மன் வண்ணமலர்களால் அலங்கரிக்கப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நீடாமங்கலம் அருகே உள்ள நரிக்குடி எமனேஸ்வரர் கோவிலில் அமாவாசையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து எமனேஸ்வரர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. கோவில் திருக்குளத்தில் நீராடி பிதுர்தர்ப்பணங்களை செய்து பக்தர்கள் சாமிதரிசனம் செய்தனர்.

இதேபோல் திருவோணமங்கலம் ஞானபுரியில் உள்ள சங்கடஹர மங்கலமாருதி ஆஞ்சநேயர்கோவில், ஆலங்குடி அபயவரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள ஆஞ்சநேயர், நீடாமங்கலம் வீரஆஞ்சநேயர், நீடாமங்கலம் சந்தானராமர் கோவிலில் உள்ள விஸ்வக்சேனர், ஆஞ்சநேயர் சன்னதிகளிலும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News