வழிபாடு
காரைக்குடி கொப்புடைய நாயகி அம்மன் கோவிலில் தெப்ப திருவிழா

காரைக்குடி கொப்புடைய நாயகி அம்மன் கோவிலில் தெப்ப திருவிழா

Published On 2022-05-21 05:09 GMT   |   Update On 2022-05-21 05:09 GMT
தெப்பத்தில் உள்ள ஒவ்வொரு படித்துறையிலும் தெப்பம் 15 நிமிடங்கள் நின்று அங்கிருந்த பக்தர்களுக்கு அம்பாள் அருள்பாலித்தார்.
காரைக்குடியில் காவல் தெய்வமாக பிரசித்தி பெற்ற கொப்புடைய நாயகி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வைகாசி திருவிழா கடந்த 10-ந்தேதி மாலை காப்புகட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. கடந்த 17-ந்தேதி தேரோட்டம் நடைபெற்றது. 10-வது நாளான நேற்று முன்தினம் யானை வாகனத்தில் அம்மன் எழுந்தருளல் நிகழ்ச்சியும், இரவு 12 மணிக்கு தெப்ப திருவிழா நிகழ்ச்சியும் நடைபெற்றது.

முன்னதாக இரவு 9 மணிக்கு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சலில் எழுந்தருளினார். பின்னர் கோவில் அருகே மின்விளக்கால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் இரவு 11.40 மணிக்கு எழுந்தருளி அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அதிர் வேட்டுக்கள் முழங்க நள்ளிரவு 12 மணிக்கு தெப்பம் சுற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தெப்பத்தில் உள்ள ஒவ்வொரு படித்துறையிலும் தெப்பம் 15 நிமிடங்கள் நின்று அங்கிருந்த பக்தர்களுக்கு அம்பாள் அருள்பாலித்தார். இதை தொடர்ந்து நேற்று காலை பூப்பல்லக்கு நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெற்றது. காரைக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு வினோஜி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Tags:    

Similar News