வழிபாடு
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குவிந்த பக்தர்கள்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குவிந்த பக்தர்கள்

Published On 2022-05-18 03:58 GMT   |   Update On 2022-05-18 03:58 GMT
கோடை விடுமுறையையொட்டி, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குவிந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். விழா காலங்களில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து வழிபடுவது வழக்கம்.

இந்த நிலையில் கோடையை முன்னிட்டு, தமிழகத்தில் பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை விடப்பட்டதால், கடந்த சில நாட்களாக கோவிலுக்கு வரும் பக்தர்களின் கூட்டம் அதிகரித்துள்ளது.

பெரும்பாலான பக்தர்கள் குடும்பத்தினருடன் கோவிலுக்கு வந்து வழிபட்டனர். நேற்று அதிகாலை முதலே கடலில் புனித நீராடி, நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். இலவச பொது தரிசனம், ரூ.100 கட்டண தரிசனத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்து முருகபெருமானை தரிசனம் செய்தார்கள்.

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையிலான ஏராளமான பக்தர்கள் பல்வேறு காவடிகளை எடுத்தும், அலகு குத்தியும், பால்குடம் எடுத்து வந்தும் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர். பெரும்பாலான பக்தர்கள் முடிகாணிக்கை செலுத்தினார்கள். சிலர் அங்கபிரதட்சணம், அடிபிரதட்சணம் செய்து வழிபட்டனர். இதையொட்டி கோவில் வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News