வழிபாடு
செல்லாண்டியம்மன் கோவில் தேரோட்டம்
செல்லாண்டியம்மன் கோவில் திருவிழாவில் தினமும் அன்ன வாகனம், யானை வாகனம், சிங்க வாகனம், காளை வாகனம், ஆட்டுக்கிடா வாகனம், குதிரை வாகனம் ஆகியவற்றில் சாமி வீதி உலா நடைபெற்றது.
திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட இ.வெள்ளனூர் ஊராட்சி ராமநாதபுரம் கிராமத்தில் உள்ள செல்லாண்டி அம்மன் கோவில் திருவிழா கடந்த மாதம் 26-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. கடந்த 3-ந் தேதி மறுகாப்பு கட்டப்பட்டது. மேலும் தினமும் அன்ன வாகனம், யானை வாகனம், சிங்க வாகனம், காளை வாகனம், ஆட்டுக்கிடா வாகனம், குதிரை வாகனம் ஆகியவற்றில் சாமி வீதி உலா நடைபெற்றது.
விழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு தேரோட்டம் நடைபெற்றது. இதில் கிராம மக்கள், இளைஞர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர் திரளாக கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். மேலும் சிறப்பு அபிஷேகம் செய்து வழிபட்டனர்.
கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக தேர் வலம் வந்து இரவு 7.30 மணியளவில் கோவிலை வந்தடைந்தது. நேற்று மஞ்சள் நீராட்டு விழாவுடன் திருவிழா நிறைவுபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம கரைக்காரர்கள், பொதுமக்கள் செய்திருந்தனர்.