வழிபாடு
ஸ்ரீ மதுரம்மா திருக்கோவில் 120 அடி உயர தேர்

ஸ்ரீ மதுரம்மா திருக்கோவில் 120 அடி உயர தேர்

Published On 2022-05-13 14:25 IST   |   Update On 2022-05-13 14:25:00 IST
சுமார் 120 அடி உயரத்தில் பிரமாண்டமாக காட்சி தரும் ஸ்ரீ மதுரம்மா திருக்கோவில் தேர், சுமார் 20 அடுக்குகளைக் கொண்டு காணப்படுகிறது.
கர்நாடக மாநிலம் பெங்களூரு மாவட்டத்தில் அமைந்துள்ளது, ஹஸ்கூர் என்ற இடம். இங்கு ஸ்ரீ மதுரம்மா திருக்கோவில் அமைந்திருக்கிறது.

இந்த கோவில் திருவிழாவின் போது, இழுக்கப்படும் தேர் மிகவும் வித்தியாசமான முறையிலும், பிரமாண்டமாகவும், அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் வகையிலும் அமைக்கப்பட்டிருக்கிறது.

இந்த ஆலயத்தின் தேர், பல அடுக்குகளைக் கொண்ட, உயரமான கட்டிட அமைப்பு போல காட்சி தருகிறது. சுமார் 120 அடி உயரத்தில் பிரமாண்டமாக காட்சி தரும் இந்த தேர், சுமார் 20 அடுக்குகளைக் கொண்டு காணப்படுகிறது. இந்த ஆலயத் தேர் திருவிழாவின் போது, இதே போல இன்னும் சில பிரமாண்ட தேர்களும் நகரை வலம் வருமாம்.

Similar News