வழிபாடு
திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் 2 ஆண்டுக்கு பிறகு கருடசேவை விழா

திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் 2 ஆண்டுக்கு பிறகு கருடசேவை விழா: பக்தர்கள் குவிந்தனர்

Published On 2022-05-09 09:17 IST   |   Update On 2022-05-09 09:17:00 IST
திருவள்ளூர் வீரராகவர் கோவில் பிரம்மோற்சவ விழாவில் 12-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது. 9-ந்தேதி(இன்று) காலை 10 மணிக்கு தீர்த்தவாரி நடைபெற உள்ளது.
திருவள்ளூரில் உள்ள வைத்திய வீரராகவ பெருமாள் கோவிலில் சித்திரை பிரமோற்சவ விழா விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.

ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக கோயில் வளாகத்தில் பக்தர்களின்றி விழா நடைபெற்றது. இந்த நிலையில் கொரோனா தற்போது குறைந்த நிலையில் இந்த ஆண்டுக்கான சித்திரை பிரம்மோற்சவ விழா கடந்த 6-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

10 நாட்கள் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று வீரராகவ பெருமாள் கருட வாகனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக கோவிலில் ஏகாந்தமாக நடைபெற்ற கருட சேவை இந்த ஆண்டு முக்கிய வீதிகளின் வழியாக கருட வாகனத்தில் வீரராகவ பெருமாள் ஊர்வலமாக சென்றார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பிரம்மோற்சவ விழாவின் 7-ம் நாளான வரும் 12-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது. 9-ந்தேதி காலை 10 மணிக்கு வீரராகவர் கோவில் குளத்தில் தீர்த்தவாரி நடைபெற உள்ளது.

Similar News