வழிபாடு
திருத்தணி முருகன் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவம்

திருத்தணி முருகன் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவம்

Published On 2022-05-07 09:49 IST   |   Update On 2022-05-07 09:49:00 IST
திருத்தணி முருகன் கோவிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு முருகப்பெருமானை தரிசித்து வழிப்பட்டனர்.
திருத்தணி முருகன் கோவிலில் ஆண்டுத்தோறும் சித்திரை மாதத்தில் பிரம்மோற்சவ விழா வெகு விமர்சையாக நடைப்பெறுவது வழக்கம். கொரோனா தொற்று காரணமாக, கடந்த 2 ஆண்டுகளாக சித்திரை மாத பிரம்மோற்சவ விழா நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில் நோய்தொற்று பரவல் தற்போது குறைந்ததை தொடர்ந்து, இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சித்திரைமாத பிரம்மோற்சவ விழா முருகன் கோவிலில் நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

அப்போது முருகப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில் கொடி மரம் முன்பு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாரதனைகள் நடைப்பெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு முருகப்பெருமானை தரிசித்து வழிப்பட்டனர்.

இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இனை ஆணையர், செயல் அலுவலர் பரஞ்ஜோதி, உதவி ஆணையர் ரமணி ஆகியோர் செய்திருந்தனர்.

Similar News