வழிபாடு
வட்டன்விளை முத்தாரம்மன்

வட்டன்விளை முத்தாரம்மன் கோவில் கொடை விழா

Published On 2022-05-07 08:49 IST   |   Update On 2022-05-07 08:49:00 IST
வட்டன்விளை முத்தாரம்மன் கோவில் கொடை விழாவில் முத்தாரம்மன் சப்பர பவனி, அம்மன் மஞ்சள் நீராடி வீதியுலா,வில்லிசை, சிறப்பு அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் பரமன்குறிச்சி அருகேயுள்ள வட்டன்விளையில் முத்தாரம்மன் திருக்கோவில் உள்ளது. இந்த கோவிலில் சித்திரை மாத பெருங் கொடை விழா கடந்த 1-ம் தேதி வருஷாபிஷேகத்துடன் தொடங்கியது.

தொடர்ந்து விழா நாட்களில் அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு ஆபிஷேகம், அலங்கார தீபாராதனை, புஷ்பாஞ்சலி, 108 திருவிளக்கு பூஜை,108 பால்குட ஊர்வலம், கோலாட்டம், கரகாட்டம் கேரளா நடனங்கள், சந்தன மாரியம்மன் கிளி வாகனத்தில் பவனியும் நடைபெற்றது.

மேலும் முத்தாரம்மன் சப்பர பவனி, அம்மன் மஞ்சள் நீராடி வீதியுலா,வில்லிசை, சிறப்பு அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து மகிழ்ச்சி அடைந்தனர்.

Similar News