வழிபாடு
திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் பிரம்மோற்சவ விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது

Published On 2022-05-06 13:37 IST   |   Update On 2022-05-06 13:37:00 IST
திருவள்ளூர் வீரராகவர் கோவில் பிரம்மோற்சவ விழாவில் வருகிற 8-ந்தேதி கருட சேவையும், 12-ந்தேதி தேர் திருவிழாவும், 14-ந்தேதி தீர்த்தவாரியும் நடைபெற உள்ளது.
திருவள்ளூரில் உள்ள வீரராகவ பெருமாள் கோவிலில், சித்திரை மாத பிரமோற்சவ விழா இன்று காலை 4.45 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதனைத் தொடர்ந்து காலை 6 மணிக்கு தங்க சப்பரத்தில் உற்சவர் வீரராகவ பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ராக திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பா லித்தார்.

தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் விழாவில் உற்சவர் வீரராகவர் பெருமாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

பிரம்மோற்சவ விழாவின் 3-ம் நாளான வருகிற 8-ந்தேதி கருட சேவை வெகு விமரிசையாக நடைபெறுகிறது. வருகிற 12-ந்தேதி காலை 7.30 மணிக்கு தேர் திருவிழாவும், 14-ந்தேதி திருக்குளத்தில் தீர்த்தவாரி நடைபெற உள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் தேவஸ்தானம் சார்பில் செய்து வருகின்றனர்.

இதையும் படிக்கலாம்...வெள்ளிக்கிழமைகளில் லட்சுமி துதி சொல்லுங்கள்

Similar News